'விவஸ்த்தையில்லை'
வடக்கு மேற்கு மெக்சிகோ திஜுவானாவை சேர்ந்த பெண் ரோசா இவர் தனது பேஸ் புக் பக்கத்தில் கைகள் கட்டபட்ட நிலையிலும், மற்றும் குழந்தையின் வாயை டேப் கொண்டு ஒட்டபட்ட நிலையிலும் படுத்து இருக்கும் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த பேஸ்புக் ஆர்வலர்களின் ஏக கண்டனத்துக்கு அந்த பெண் ஆளானார். இதை தொடர்ந்து அந்த பக்கத்தில் இருந்து அந்த படம் அகற்றபட்டது.
பின்னர் பேஸ்புக்கில் அந்த பெண் வெளியிட்டு உள்ள தகவலில் எனது குழந்தை நன்றாக உள்ளது இந்த புகைப்படம் வெளியானவுடன் உலகமே என்னை டிஸ் லக் செய்தது என கூறி உள்ளார்.
நான் இந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்தது யாரும் நினைப்பது போல அல்ல. ஏனெனில் நாங்கள் விளையாடி கொண்டு இருந்தோம். எனது குடும்ப்பம் முழுவதும் என்னுடன் உள்ளது. இது எந்த கெட்ட நோக்கத்திற்காகவும் அல்ல.இந்த புகைப்படத்தை வெளியிட்டத்து மனது வலிக்கிறது. என குறிபிட்டு இருந்தார்.
ரோசாவும் அவரது கணவரையும் மெக்சிகோ பொது அமைச்சகம் மற்றும் பாலியல் குற்றங்கள் நிறுவனம், விசாரணை நடத்தி வருகிறது.
இது ஒரு விமதான மன நோய்
ReplyDelete