Header Ads



மரண தண்டனைக்கு எதிராக, வெலே சுதா மேன்முறையீடு

ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் கம்பொல வித்தான சமந்தகுமார மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.

நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட வெலே சுதாவுக்கு நீதிவான் பிரித்தி பத்மன் சூரசேன மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கடந்த  3 மாதங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்ற வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினமே வழங்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டு கல்கிசை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளை விநியோகம் செய்து வந்த குற்றச்சாட்டில் வெலே சுதா கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.