Header Ads



மஹிந்த ராஜபக்ச கைது செய்யப்படுவாரா..?

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச ஊடகங்களில் விளம்பரம் செய்யப்பட்ட நிலுவைக் கொடுப்பனவு தொடர்பில், வாக்குமூலம் ஒன்று பெற்றுகொள்வதற்காக நாளை வியாழக்கிழமை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மஹிந்த ராஜபக்ச கைது செய்யப்படலாம் என தகவல்கள் கிடைத்தமையினால் நாளைய தினம் லட்சக் கணக்கிலான மஹிந்த தரப்பினரை கொழும்பிற்கு அழைத்து பெரிய அளவிலான போராட்ட வியாபாரம் ஒன்றை நடத்துவதற்கான செயற்பாடுகள் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த தரப்பினர் இதனை ஏற்பாடு செய்து கொண்டுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சவின் கைதை தடுப்பதற்காக மக்களின் ஊடாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது அவர்களின் நோக்கமாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதியின் வழக்கறிஞர்கள், குறித்த ஆணைக்குழுவிற்கு முன் மஹிந்த ராஜபக்ச நாளை ஆராஜாகுவார் என்று அறிவித்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பிரதானி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் தலைவர் அநுர சிறிவர்தன, சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முகாமையாளர் அருண மூர்த்தி விக்ரமசிங்க, சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பிரதி பொது முகாமையாளர் உபாலி ரஞ்சித், சுயாதீன தொலைக்காட்சி சேவையின் உதவி முகாமையாளர் திலிப் பிரியந்த ஆகியோருக்கு நாளைய தினம் ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 09.00 மணியளவில் இந் நபர்கள் ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளனர்.

No comments

Powered by Blogger.