எழுச்சியை தடுக்காதீர்கள், சியோனிச ஆதிக்கத்திற்கு எதிராக போராட வேண்டும் - இஸ்மாயில் ஹனியா
-அபூஷேக் முஹம்மத்
ஹமாஸ் அரசியல் பிரிவு துணை தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜும்மா தினத்தன்று ஆற்றிய குத்பாவில் ஜெருசலத்தைக் காட்டிலும் காஸா பகுதி போரை சந்திக்க தயாராக இருப்பதாகவும், ஜெருசலத்தின் போர் ஹமாஸின் போர், இந்த இயக்கம் ஒருபோதும் அதன் கடமைகளையும் பங்கையும் விட்டு கொடுக்காது என கூறினார்.
தற்பொழுது ஜெருசலம் மற்றும் மேற்கு கரை பகுதிகளில் நடக்கும் சண்டைகள் தான் உண்மையான சுதந்திர போராட்டம். காஸா இஸ்ரேலுக்கு எதிரான மூன்று பெரிய போர்களை சந்தித்தமையால் பொறுமை மற்றும் நிலைத்து நின்று போராடும் மன உறுதியை பெற்றுள்ளது. அதுவே ஜெருசலம் மற்றும் மற்ற பாலஸ்தின பகுதிகளின் விடுதலைக்கு முன் உதாரணமாக உள்ளது.
பாலஸ்தின சுதந்திர போராட்டம் என்பது மஸ்ஜித் அல்-அக்ஸாவை மீட்பதே . காஸா மக்கள் நாங்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு செயல்பட.தயாராக உள்ளோம்
காஸா ஒரு தனி நாடு அல்ல! பாலஸ்தீன ரத்தம் மற்றும் போரில் கலந்த நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! காஸா பாலஸ்தீன பகுதிகள், கைதிகள் மற்றும் புனித தளங்களை மீட்கும் வரை தொடர்ந்து போராடும் .
பாலஸ்தீன எழுச்சி மற்றும் உறுதி வலுவாக இருந்தால்தான் அது சுதந்திரத்திற்கு வழி வகுக்கும். பாலஸ்தீன மக்கள் பாலஸ்தின எழுச்சியை நல்ல முறையில் கொண்டு செல்லுங்கள். உள்ளிருந்து அல்லது வெளியிலிருந்து ஜெருசலத்தின் எழுச்சியை தடுக்க நினைக்காதிர்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
தற்போதைய எழுச்சி விடுதலை கிடைக்கும் வரை தொடர வேண்டும். 20 வருடமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவது பயனற்றது. விரக்தியும் உள்நாட்டு மோதல்களும் தான் கிடைத்தது.
இஸ்லாமிய - அரபு அமைப்புகள் ஏற்படுத்தி ஜெருசல எழுச்சிக்கு உதவ வேண்டும். அரேபிய மற்றும் முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து ஜெருசலம் மற்றும் மஸ்ஜித் அல்-அக்ஸாவை மீட்க. சியோனிச ஆதிக்கத்திற்கு எதிராக போராட வேண்டும்
masha allah we will help by our duaas and even from our body insha allah
ReplyDelete