Header Ads



அமைச்சருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, கெட்டவார்த்தையால் திட்டடிய பௌத்த தேரர்

வனவிலங்கு அமைச்சரை கொழும்பு பிரதேச விஹாரை ஒன்றின் நாயக்க தேரர் ஒருவர் கெட்ட வார்த்தையினால் திட்டியுள்ளார். தொலைபேசி ஊடாக இவ்வாறு கெட்ட வார்தையினால் திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவே இவ்வாறு திட்டு வாங்கியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் யானைகளை வைத்திருப்போர் ஒரு மாத காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றின் ஊடாக உத்தரவு பெற்றுக் கொண்டதனைத் தொடர்ந்து இவ்வாறு குறித்த பௌத்த நாயக்க தேரர் கெட்ட வார்தையில் திட்டியுள்ளார்.

பிரபல்யமான பௌத்த விஹாரை ஒன்றின் நாயக்க தேரரே இவ்வாறு அமைச்சரை திட்டியுள்ளனர்.

மூன்று வார காலத்திற்குள் சட்டவிரோதமான முறையில் வைத்திரக்கும் யானைகளை ஒப்படைக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி யானைகளை மீட்க வேண்டியேற்படும் என அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.