Header Ads



"அடையாளம் இழக்கப்பட்ட சோனக சமூகம்"


ஜன்ஸி கபூர்
அதிபர்
-கதீஜா பெண்கள் கல்லூரி. யாழ்ப்பாணம்-


யாழ் முஸ்லிம்களுக்கு...
கால் நூற்றாண்டு
கரைந்து போனது வெறும்
கண்ணீரினில்....

90 ஒக்டோபரின்.......
இழப்புக்களைப் பேசிப் பேசியே.....
நம்
இளமையும்
நரை கண்டு போனது

இன்னும்.....
சிதைக்கப்பட்ட நம் மனைகள்...
வெயிலில் கருகி
மழையில் அழுகி
விலாசம் சுமக்கின்றன .
நம் கடந்த காலத்தை

அன்று...
வணிகச் செழிப்பில்
கனிந்த நம் சமூகம்
இன்று..
அங்காடிகளில்
அல்லாடிகளாய்
அவலம் சுமந்து....
அவனிக்கும் பாரமாய்..
அந்தரிக்கின்றது..

நாமோ...
சிறுபான்மையானதில்
அகதிக்கறை கழுவப்படாமலே
வறுமைச் சமூகமாய்
வேரறுக்கப்படுகின்றோம்
பெரும்பான்மை நிலங்களில்..

அன்றைய
இனச்சுத்திகரிப்பின்
கரகோஷம்...
இன்னும்....
நிவாரணமின்றியே
அரங்கேற்றப்படுகிறது
வெறும் கோஷங்களாய்

இங்கே
மீளாத் துயரில்
வாழ்க்கை யதார்த்தம்..
மந்தகதியிலோ
மீள் குடியேற்றம்...

அன்றைய
திட்டமிடப்பட்ட இனச்சுத்திகரிப்பின் எச்சங்களாய்
அடையாளமிழக்கப்பட்ட
சோனக சமூகம் நாம்...

வெறும் கருவாகி
பேசு பொருளாகின்றோம்
ஒவ்வொரு 
கறுப்பு ஒக்டோபரிலும்...!

2 comments:

  1. True, true, Totally True.

    Truthful Governments did nothing.
    Tasteless Muslim parties did the same,
    Tormented mind talkes to my lord,
    Taught a lesson to these Trespassers.

    Jancy's poem attracted me,
    Joyful life reminisced by me,
    sadful life still clinging on me,
    Saviour mine, I leave that with you.

    Oh my Jaffna Muslims!
    You became a political Joke.
    Oh Jancy!
    Thank you a lot!

    ReplyDelete

Powered by Blogger.