பௌத்த மதத்தைப் பாதுகாக்குமாறு கோரி, அரசியல்வாதியின் கட்அவுட் மீதேறி தற்கொலை முயற்சி
பௌத்த மதத்தைப் பாதுகாக்குமாறு கோரி, மகரகம நகரின் மத்தியில் அமைந்துள்ள அரசியல்வாதியொருவரின் கட்அவுட் மீதேறி நபரொருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
குறித்த நபர் தனது வயிற்றில் இரண்டு பெற்றோல் குண்டுகளைக் கட்டிக் கொண்டு, கையில் லைட்டர் ஒன்றையும் வைத்துக்கொண்டு அரசியல்வாதியொருவரின் கட்அவுட் மீதேறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அத்துடன் பௌத்த மதத்தைப் பாதுகாக்குமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுக்கும் கடிதங்களையும் காட்சிப்படுத்தியுள்ளார். குறித்த கட்அவுட் 20 அடி உயரமானது என்று தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களும் பொலிசாரும் இணைந்து அவரை கட்அவுட்டை விட்டுக் கீழே இறக்க மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
இதனையடுத்து அருகில் இருந்த விகாரையில் இருந்து அவ்விடத்துக்கு வருகை தந்த பிக்குமார் இருவரின் வேண்டுகோளை அடுத்து குறித்த நபர் கீழே இறங்கி பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் அநுராதபுரம், ரம்பாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கோரி தற்கொலை செய்ய வேண்டியதில்லை. முதலில் பௌத்த பிக்குமார் பௌத்த மத அடிப்படையில் வாழ்ந்தாலே அது பாதுகாக்கப்படும். பௌத்த பிக்குமாரிடம் காணப்படும் மிருகத்தனமான, அசிங்கமான நடவடிக்கைகளே அதை மக்கள் வெறுக்கக் காரணம். ஞான சாரை பெரிய உதாரணம்.
ReplyDeleteஅடா அடி முட்டாள் தற்கொலையை பௌத்த மதம் அனுமதிக்கவில்லை அப்போ எவ்வாறு நீ பாதுகாக்ககோரி தற்கொலை செய்வாய் ? உண்மையான மதமாக இருந்தால் தானாக பாதுகாக்கப்படும்.ஆகவே உன்னாலும் முடியாது உன்னை அனுப்பிய சேனாக்களாலும் மடியாது .
ReplyDeleteஅட பரதேசி உங்களைப் போன்றவர்களால் தான் பெளத்த மதத்திற்கும் புத்த தர்மத்திற்கும் ஆபத்து. பெளத்த மதத்தை சிதைக்க வேற்றுக் கிறகங்கலிருந்து ஆற்கள் வரத்தேவையில்லை ஞானசாரவும் அவர்தம் கூட்டமும் நீயும் உன்னைப் போன்றவர்களும் போதும்
ReplyDelete