Header Ads



தடுத்து நிறுத்தினார் ஹரீஸ்

சாய்ந்தமருதில் அமைந்திருக்கும் இளைஞர் சேவைகள் மன்ற கிழக்குமாகாண காரியாலயத்தை வேறு இடத்துக்கு நகர்த்த எடுத்த நடவடிக்கைக்கு எதிராக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்  விரைந்து சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்ததன் காரணமாக குறித்த இளைஞர் சேவைகள் மன்ற கிழக்குமாகாண காரியாலயத்தை சாய்ந்தமருதில் இருந்து அகற்றுவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2011 ஆண்டு முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எம்.முஸ்தபா  முயச்சியால் திறந்து வைக்கப்பட்ட இக்காரியாலயம் தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கு மிகுந்த வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் நிறுவனங்களின் உயர் காரியாலயங்கள் இருப்பதை சில தீவிர போக்குக்கொண்ட பெரும்பான்மையினர் எதிர்ப்பது வருந்தத் தக்க ஒன்றாகும். நிந்தவூரில் அமைந்திருக்கும் மாவட்ட தொழிற் பயிற்சி அதிகாரசபையின் மாவட்டக்காரியாலயத்தையும் பெரும்பான்மையினர் வாழும் பிரதேசத்துக்கு மாற்றுவதற்கான முயற்சிகளும் இடம்பெறுவதாகவும் தகவல்கள் கூறுகிறான.


No comments

Powered by Blogger.