Header Ads



வடக்கு முஸ்லிம்களின் துன்பியலும், ஜனாதிபதி மைத்திரி + பிரதமர் ரணிலுக்கான அழைப்பும்

வட மாகாணத்திலிருந்து அனைத்து முஸ்லிம் மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட சம்பவத்தின் 25 வது ஆண்டு நிறைவை இந்த அக்டோபர் மாதம் முஸ்லிம் சமூகம்;, நினைவு கூர்கிறது.  முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா (ஆஊளுடு) வட முஸ்லிம்கள் தொடர்ந்து அனுபவித்துவரும் துயரங்களைக் கவனத்திலெடுத்து மீள் குடியேற்றத்துக்கான அவர்களது கோரிக்கைக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றது.

1990 இல் வெளியேற்றத்திற்கு முன் செழித்தோங்கிய அவர்களது விவசாயம், மீன்பிடி மற்றும் வணிகத் துறைகள், இந்தக் கால் நூற்றாண்டு இடப்பெயர்ச்சியின் விளைவாக, ஒரு சமுதாயம் இதுவரை கண்டிராத அளவிற்கு பாதிப்பை எதிர்நோக்கியது. வடக்கு முஸ்லிம்களின் பொருளாதார இழப்பு அநேகமாக பில்லியன் ரூபாய்களையும் தாண்டியுள்ளது. அவர்களின் உளவியல் தாக்கத்தின் விளைவுகள் சொல்லுந்தரமன்று. அவர்களின் சொத்துகள்; மற்றும் வீடுகள் அபகரிக்கப்பட்ட நிலையிலும் எந்த அரசாங்கமும், வடக்கிலிருந்து உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்த இந்த முஸ்லிம்களின் இக்கட்டான நிலை தொடர்பாக இதுவரை போதுமான அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. புலிகளின் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவளிக்க மறுத்த ஒரே காரணத்துக்காகவே இந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.

2009இல் யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து, சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக புத்தளம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அகதிகளாக வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் மனதில் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச்செல்லலாம் நம்பிக்கை துளிர்விட்டது. மீள் குடியேற்றம் தொடர்பாக அன்றைய அரசாங்கத்தின் 'கடைசியில் உள்வந்தோர,; முதலில் வெளியே' என்ற கொள்கை காரணமாக, அரசாங்கம், சர்வதேச சமூகம் மற்றும் இரக்கசிந்தையுள்ள நன்கொடையாளர்கள் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட பாரிய அளவிலான மீள்குடியேற்றத்தின் பயன்களை முஸ்லிம் சமூகத்தினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. சக்திவாய்ந்த ஜனாதிபதி செயலணி (Pவுகு) மூலம் 2012 இல் இடம்பெயர்ந்த முஸ்லிம்களைக் குடியமர்த்த எடுக்கப்பட்ட ஒரு மீள்குடியேற்ற முயற்சிகூட ஒரு சில நூறு ஏக்கர் காணிக்குள் மட்டுமே வரையறை செய்யப்பட்டிருந்தது. இடம்பெயர்ந்த ஏனைய மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் எதுவும் முஸ்லிம்கள் வழங்கப்படவில்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சில பௌத்த தீவிரவாதிகள் கூட இப்போது இதற்கு சவால் விடுக்கின்றனர். முஸ்லிம் மீள்குடியேற்றத்தைத் தடுக்கும் வன, தேசிய சூழல், தொல்பொருள் கட்டளைச்சட்டம் மற்றும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் என்பவற்றுக்கான முரண்பாடான சுற்றறிக்கைகள் மற்றும் திருத்தங்கள், முஸ்லிம்கள் 1990 இல் தமது நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னரே கொண்டுவரப்பட்டன.

ஒரு தீவிரவாத பௌத்த பிரிவினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முன்னெப்போதும் இல்லாத வெறுப்பு பிரச்சாரத்தின் விளைவாக மன்னார் மாவட்டத்தில் தெற்கு முசலி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. பொதுபல சேனா, அரபு நாடுகள் சட்டவிரோத குடியிருப்புக்களுக்கு ஆதரவளித்து வருவதாகக் கூறி தெற்கு முசலியில் எதிர்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூட தீவிரவாத பௌத்த இயக்கங்களோடு இணைந்து வில்பத்து தேசிய வனவிலங்கு ஒதுக்கீட்டில் பெரும் அளவிலான பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறிவருகின்றனர்;. இவையனைத்தும் இடம்பெயர்ந்த முஸ்லிமகளின்; மீள்குடியேற்றத்தைத் தடுக்கும் ஒரே நோக்கத்துடன் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளன.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை  ஊக்குவிப்பதற்கான ஐ.நா. மனித உரிமைகள் சபையின், இலங்கை அரசாங்கத்தினதும்; மேற்கத்திய நாடுகளினதும் இணை அணுசரனையுடனான ஜெனீவா தீர்மானம், அனைத்து சமூகங்களைச் சேர்ந்த போர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 1990இல் 100,000க்கும் மேற்பட்ட வடக்கு முஸ்லிம்களின்  வெளியேற்றம் மற்றும் இடப்பெயர்வும் இதில் உள்ளடக்கப்பட்டு அவர்களது மீள்குடியேற்றத்துக்கான முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும

நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களின் துன்ப துயரங்களுக்கு விடிவு ஏற்படும் வகையில் இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகம் என்பவற்றின்  அர்ப்பணிப்புடன், நீண்ட மோதல் தொடர்பான பிரச்சினைகள் கையாளப்படவும் ஒன்றாகப் பணியாற்றவும், 48 மணி நேர முன்னறிவிப்புடன் வெளியேற்றப்பட்டவர்களான வடக்கு முஸ்லிம்களின் அதிலும், வெறுமனே இரண்டு மணி நேர முன்னறிவிபபுடன் வெளியேற்றப்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்களின் விடயம் தொடர்பான செயல்முறையில் தீவிர அக்கறை செலுத்துமாறு, முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிகிறது.

என்.எம். அமீன்,
தலைவர்,
முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா.

No comments

Powered by Blogger.