Header Ads



அரசியல்வாதிகளை மண்டியிட்டு, வணங்க வேண்டாம் - மங்கள உருக்கமான வேண்டுகோள்

பாடசாலை மாணவர்கள் அரசியல்வாதிகளை, மண்டியிட்டு வணங்க வேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எல்லா அரசியல்வாதிகளும் சிறந்த நற்பண்புகளை உடையவர்கள் அல்ல. குறிப்பிட்ட சிலர் மாத்திரமே அவ்வாறு இருக்கின்றார்கள். ஆகவே மதிப்பளியுங்கள், ஆனால் மண்டியிட்டு வணங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

அறநெறிப் பாடசாலைக்குச் சென்றாலும், பாலர் பாடசாலைக்குச் சென்றாலும், உயர்தர மாணவர்களின் கருத்தரங்கு ஒன்றுக்குச் சென்றாலும், மாணவ மாணவியர், மண்டியிட்டு வணங்குகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசியல்வாதிகளை வணங்கக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தம்மை மாணவர்கள் மண்டியிட்டு வணங்கிய போதிலும், தாம் போதைப் பொருள் விற்பனை, பாலியல் தொழில் மையம், எதனோல் விற்பனை அல்லது வேறும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றேனா என்பது யாருக்கும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தெரியாத எவரையும் வணங்குவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அரசியல்வாதிகள் வணங்கப்படக் கூடியவர்கள் அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசியல்வாதிகளை கௌரவப்படுத்துவதில் தவறில்லை, கை கூப்பியோ அல்லது கைலாகு செய்தோ எமது மரியாதையை செலுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மண்டியிட்டு வணங்க வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. மாஷா அல்லாஹ், நல்ல கட்டளை. மனிதர்கள் படைத்தவனைத் தவிர வேறு யாரையும் வணங்கத் தேவையில்லை.

    ReplyDelete
  2. மனிதனை மனிதன் வணங்க வேண்டிய தேவை என்ன? சிறந்த பகுத்தறிவுச் சிந்தனையை அமைச்சர் தெரிவித்து இருக்கின்றார், சல்யூட்.

    ReplyDelete

Powered by Blogger.