ஜெனீவாவின் வழிமுறைகளில், முஸ்லிம்களின் வெளியேற்றத்தைக் கையாளுதல்..!
இந்த ஒக்ரோபர் மாதத்துடன் வடக்கில் வாழ்ந்த முஸ்லீம் குடிமக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்ட 25 வது ஆண்டு நிறைவடைகிறது.
90,000 வலுவான வடக்கு முஸ்லீம் மக்கள் வெளியேற்றும் தேசிய அளவில் ஒரு மனிதாபிமான மற்றும் அரசியல் பிரச்சினையாகத் தொடர்கிறது.
வெளியேற்றப்பட்டவர்களில் 80 சதவீதம் தங்களது பூர்வீக வாழ்விடங்களுக்கு வெளியே தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனினும், இலங்கை மக்களில் ஒரு பிரிவினராகிய இவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைக்கு பொது கவனம் அல்லது முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஒரு நீதியான தீர்வு இதுவரைக் கிட்டவில்லை.
இலங்கையில் நல்லிணக்க, பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் இலங்கை ஏற்கொண்ட இணை ஆதரவாளரைக் கொண்ட அரசாங்கத்தின் முடிவு நாட்டின் இந்த பிரச்சனைக்கு ; தீர்வு காண்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களில் பெரும்பான்மையோரால் சமீபத்திய பொதுத் தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக மற்றும் சுய விமர்சன அறிக்கையை தேசிய சமாதானப் பேரவை வரவேற்கின்றது.
'இலங்கையில் சம உரிமை, கண்ணியம் மற்றும் சுய மரியாதையுடன் வாழக்கூடிய புதிய கலாச்சாரத்தையும் சூழலையும் உருவாக்க இந்தத் தருணத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் விசாரணை அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பாகிய நாங்கள் ஏற்று கடந்த காலத்தைப் பிரதிபலிக்கும் எங்கள் சொந்த சமூகத்தின் சுயபரிசோதனையை செய்து கொள்வதற்கும் எங்கள் பொறுப்பை நிறைவேற்ற எங்கள் பெயரில் உண்டான தோல்விகள் மற்றும் நம்முடைய குற்றங்கள் என்பனவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கும் இந்தத் தருணம் அமையும்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அறிக்கையில் வெளிப்படுத்தியிருந்தது.
இந்த அழைப்பை அரசு, மற்றைய அரசியல் கட்சிகள் மற்றும் தேசிய சமூகங்கள் ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை நம்புகின்றது.
இன்று கூட, ஆறு ஆண்டுகள் போர் முடிவுக்கு வந்த பிறகும் 1990 ஆம் ஆண்டு ஒரு பெரும் தொகையினராக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் தற்காலிக வதிவிடங்களில் வாழ்ந்து கொண்டிருப்பது நாட்டில் நீதி மற்றும் நல்லிணக்க செயல்முறையிலுள்ள ஒரு குறைபாடாகவும் குற்றச்சாட்டாகவும் உள்ளது.
இது, இலங்கை கைச்சாத்திட்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகளின் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு அவர்களுக்குள்ள உரிமையை, மீறியுள்ளது.
இது இடைக்கால மீளக்குடியமர்விற்கு வழிவகுத்து திரும்ப தங்கள் உரிமையை நிரூபிக்க தம்மால் முடியாதிருப்பதையும் சொந்த சமூகத்திற்குள்ளேயே அழுத்தங்களை அதிகரித்துள்ளதோடு ஆட்சிக்கு வந்த வெற்றிகரமான அரசாங்கங்கள் இலாயக்கற்றிருப்பதையுமே காட்டி நிற்கின்றது.
இடம்பெயர்ந்த முஸ்லிம்கள்pன் சமீபத்திய மீள்குடியேற்றம் வில்பத்து தேசிய பூங்கா அத்து மீறல் என்று சர்ச்சைக்குரிய அத்துமீறலாகக் காட்டப்பட்டுள்ளது.
உண்மை நல்லிணக்க ஆணைக்குழு சர்வதேச பங்கு கொண்டு பொறுப்புக்கூறும் ஒரு நீதி பொறிமுறை மற்றும் இழப்பீட்டுக்கான ஒரு அலுவலகம் நிறுவ வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவு சர்வதேச தரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று ஒரு நீதியான தீர்வு அடிப்படையை வழங்குகிறது.
இது வெளியேற்றப்பட்டு தொடர்ந்து இயலாமையிலுள்ள முஸ்லிம்கள் தங்கள் உரிமையை நடைமுறையில் கொண்டு வருவதற்கும் தங்கள் சொந்த இடத்திற்குத் திரும்புதற்கும் ஒரு பிரயோகத்தை அளிக்கிறது.
தேசிய சமாதானப் பேரவையின் டி.ஆர்.சி. ஆணை ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கை 2002-09 வரை மட்டுப்படுத்தப்பட்ட காலமாக இருப்பதால் அதற்கு முன்னுள்ள காலப்பகுதியும் விசாரணைக்காக சேர்க்கப்பட வேண்டும் என்று கேட்டிருக்கின்றது.
1990 ல் வடக்கே முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வுகள் உட்பட யுத்தத்தின் காரணமாக நிகழ்ந்த மற்ற தீவிர மனித உரிமை மீறல்கள் பற்றியும் பின்னோக்கி விசாரிக்கப்பட வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை கேட்டிருக்கின்றது.
Post a Comment