Header Ads



இருள்மண்டி கிடக்கும் அஸ்ரப் நகர், தொழுகைக்கு பாங்குசொல்ல சென்றவரை யானை தாக்கியது

-மு.இ.உமர் அலி-

இன்று  சனிக்கிழமை (31.10.2015) இசா  தொழுகைக்கான பாங்கு சொல்லுவதற்காக  பள்ளிவாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பள்ளிவாசல் மோதினாரான  அலியார் கமறுதீன்  60  வயது என்பவரை   வீதியிலே  வைத்து யானை தாக்கியுள்ளது, இந்த வீதிகள்  இருள்மண்டி காணப்படுகின்றது  குறிப்பிடத்தக்கது.

இவரது கால் இடுப்பு போன்ற இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.காயத்துக்குள்ளானவரை பொதுமக்கள் ஒலுவில்  வைத்தியசாலைக்கு  உடனடியாக கொண்டு சென்றனர்.

அஸ்ரப்  நகரில் முக்கியமான இடங்களில்  தெருவிளக்குகள் பொருத்தப்படாமல் இருப்பதாக  அக்கிராம மக்கள்  முறையிடுகின்றனர். ஏற்கனவே   ஒரு வாரத்துக்கு முன்னர் யானையின் தாக்குதலில் பெண்ணொருவர் காயங்களிற்குள்ளானார்.அதனைத்தொடர்ந்து பொதுமக்களால்  தெருவிளக்குகளை பொருத்தித்தருமாறு  அட்டளைச்சேனை பிரதேச சபையில்  எழுத்துமூலம்  முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை எதுவித நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை என அக்கிராம வாசியான  அன்வர்  என்பவர்  தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை இதுகுறித்து  உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் வேண்டுகின்றனர்.

No comments

Powered by Blogger.