கொழும்பு நகரிற்குள் பிரவேசிக்கும், வாகனங்களிடம் கட்டணம்..?
கொழும்பு நகரிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களிடம் கட்டணம் அறவீடு செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு நகரிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதனால் அதிகளவு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு நகரிற்குள் சகல வசதிகளையும் உடைய போக்குவரத்து சேவையொன்றை ஆரம்பித்து, நகரிற்குள் பிரவேசிக்கும் மோட்டார் கார்களுக்கு கட்டணம் அறவீடு செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
1985ம் ஆண்டு நாள் ஒன்றில் 130000 வாகனங்கள் கொழும்பு நகரிற்குள் பிரவேசித்ததாகவும் தற்போது அந்த எண்ணிக்கை 500000 மாக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் 85 வீதமானவை மோட்டார் கார்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களாகும் என ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கொழும்பு நகரிற்குள் நாள் தோறும் பிரவேசிக்கும் பஸ்களின் எண்ணிக்கை 32000 முதல் 29000மாக குறைவடைந்துள்ளது.
தனியார் வாகனங்களில் பயணிப்போருக்கு கொழும்பு நகரிற்கு வெளியே வைத்தே போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய யோசனைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment