Header Ads



இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், சேவை பரீட்சையில் சித்தி

(சுலைமான் றாபி)

இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் சேவை பரீட்சையில் நிந்தவூரைச் சேர்ந்த றிஸ்வி இஸ்மாயில் அண்மையில் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட கடல் கடந்த வெளிநாட்டு சேவை பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

இலங்கையிலிருந்தது தெரிவு  செய்யப்பட்ட மொத்த 25 பரீட்சாத்திகளுள் உள்ளடங்கும் 02 முஸ்லிம்களில் ஒருவரான றிஸ்வி இஸ்மாயில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்தினைச் சேர்ந்தவர் என்பது பெருமைப்படத்தக்க விடயமாகும்.

நிந்தவூர் மீராநகரைச் சேர்ந்த எம்.எச்.எம். இஸ்மாயில் மற்றும் கே. ஆயிஷா ஆகியோரின் புதல்வரான றிஸ்வி இஸ்மாயில் தனது ஆரம்ப கல்வியை நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் மேற்கொண்டதுடன் க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தரக் கல்வியை நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் மேற்கொண்டார்.

மேலும் தனது பல்கலைக்கழக கல்வியை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தகவல் முகாமைத்துவ கற்கை பட்டத்தினை மேற்கொண்டதுன் தனது பட்டப்பின் படிப்பினை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார்.

மேலும் வெளிநாட்டு சேவை டிப்ளோமாவினை பூர்த்தி செய்துள்ளதுடன் சமூகவியல் துறையிலும், தனது பட்டப்பின் படிப்பினை இலங்கை களனி பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டு வருகிறார்.

பிரிட்டிஷ் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் யுனிசெப் போன்ற சர்வதேச நிறுவனங்களில் சேவையாற்றியதுடன் அண்மைக்காலமாக இந்திய உயர் ஆணையாளத்தில் திட்ட உதவியாளராக சேவையாற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது றிஸ்வி இஸ்மாயில் இலங்கை வெளிநாட்டு கடல் அலுவல்கள் பரீட்சையில் சித்தியடைந்ததும் எதிர்காலத்தில் ஒரு வெளிநாட்டு தூதுவராக வருவதும் கிழக்கு மாகாணம் மற்றும் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு நபர் என்பது எம்மை பெருமிதம் அடையச் செய்யூம் விடயமாகும்.

இறைவன் இவருக்கு உடல்,உள ஆரோக்கியத்தை வழங்கி மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க உதவிகள் புரிய வேண்டும் என பிராத்திக்கின்றோம்.

2 comments:

  1. Congratulation. My best wishes to my friend Mr.Ismail Risvi

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் தென்கிழக்கு பல்கலைகழகத்தில் இவர் முதலாவது பட்டத்தை பெற்று முன்னேறிய இவரின் பெருமை கௌரவ தலைவர் அஷ்ரப் அவர்களையே சாரும் .அவர்தன் தென்கிழக்கு பல்கலைகழகத்தை உருவாக்க அயராது பாடுபட்டவர் அல்லாஹ் அவரின் கப்றை விசாலமான சொர்க்கமாக ஆக்கியருள்வானாக ஆமீன்

    ReplyDelete

Powered by Blogger.