முச்சக்கர வண்டிகளில் பிள்ளைகளை, பாடசாலைக்கு அழைத்துச்செல்லுபவர்களுக்கு விஷேட செயற்திட்டம்
(சுலைமான் றாபி + மு.இ.உமர் அலி)
இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகத்தினை ஒழிப்பது சம்பந்தமாகவும், சிறுவர்களின் பாதுகாப்பு சம்பந்தமாகவும் ஆட்டோ சாரதிகளை அறிவுறுத்தும் விஷேட நிகழ்வு நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இன்று (23) நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாகவும், வளவாளராகவும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம். உபுல் பிரியலால், பொலிஸ் பரிசோதகரும், சம்மாந்துறை பொலிஸ் நிலைய சமூக சேவை பொலிஸ் பொறுப்பதிகாரியுமான எஸ்.எம். அமீர், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எ.எல்.எம். சலீம், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் ஹலைவர் எ.அம. இஸ்மாயில், செயலாளர் எம்.எ.எம். றசீன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள் உள்ளிட்ட ஆட்டோ சாரதிகளும் கலந்து கொண்டனர்.
இதேவேளை எதிர்காலத்தில் முச்சக்கர வண்டிகளில் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச்செல்லுபவர்களுக்கு விஷேட செயற்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, இதற்காக வேண்டி சம்மாந்துறை பொலிஸ் நிலையம் மற்றும் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் ஆகியவைகளின் ஒருங்கமைப்புடனான 'விஷேட ஸ்டிக்கர்" வழங்கப்படுவதோடு, இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட முச்சக்கர வண்டிகள் மாத்திரமே மாணவர்களை பாடசாலைக்கும் அழைத்துச் செல்லும் சேவையில் ஈடுபட முடியும் என அங்கு உரையாற்றிய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம். உபுல் பிரியலால் தெரிவித்தார்.
Post a Comment