Header Ads



பஷார் அல் - ஆசாத், ரஷ்யா பயணம்

ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சிரியா ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்ய விமானப் படை கடந்த ஒரு மாதமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தப் பின்னணியில் சிரியா ஜனாதிபதி பஷார் அல்- ஆசாத் நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்று, விளாடிமிர் புடினை சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து புடின் கூறியதாவது, கடந்த பல ஆண்டுகளாக தீவிரவாதத்துக்கு எதிராக சிரியா மக்கள் தனியாகப் போராடி வந்தனர்.

தற்போது அவர்களுக்கு ரஷ்யா ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சோவியத் யூனியனில் அங்கம் வகித்த நாடுகளைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உள்ளனர். அவர்களால் ரஷ்யாவின் பாது காப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது.

ஜனாதிபதி ஆசாத்துக்கு ராணுவ உதவி அளிக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த சிரியா வையும் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றிவிடுவார்கள்.

எனவே சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு சிரியாவில் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார்.



No comments

Powered by Blogger.