ஒழிந்து திரிய எனக்கு, அவசியம் கிடையாது - ஞானசாரர்
போக்குவரத்து நெரிசல் காரணமாக நீதிமன்றில் முன்னிலையாக முடியாவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளா கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரின் முக்கிய பகுதிகளில் நேற்று பரீட்சார்த்த அடிப்படையில் புதிய போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக நீதிமன்றில் முன்னிலையாவதற்கு ஐந்து நிமிடங்கள் காலதாமதமானது.
நீதிமன்றில் முன்னிலையாவதனை தவிர்க்கவோ அல்லது ஒழிந்து திரியவோ எனக்கு எவ்வித அவசியமும் கிடையாது.
இராஜகிரிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய போக்குவரத்து திட்டம் காரணமாக முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு பிரதேசத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் உச்ச அளவில் பங்களிப்பினை வழங்கத்தயார்.
அடுத்த வழக்கு விசாரணை திகதியில் நீதிமன்றில் முன்னிலையாவேன் என தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியமை குறித்து ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜாதிக பல சேனா அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அத்துமீறி பிரவேசித்து இடையூறு விளைவித்தல் மற்றும் புனித ஊர்ஆனை இழிவுபடுத்தி கருத்து வெளியிடல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஞானசார தேரர், மற்றும் சிலருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவர் இவருக்கு விரும்பி காரணங்களை சொன்னால் நீதிமனறம் ஏற்றுக்கொள்ளுமா?முதலில் பொலிசார் நீதிமன்ற உத்தரவான பிடீயாணயை நிறைவேற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் அதன் பின் நீதிமன்றம் அதன் கடமையை செய்யும்
ReplyDeleteலூசா இவன்? என்ன ஒரு காரணம்!
ReplyDeleteSoththam mr da moola mela ella keela erikki athuvum pinnadi erikki
ReplyDeleteஏன்..? வருகின்ற வழியில் பூனை ஒன்று குறுக்காக ஓடியது என்று ஒரு காரணமுள்ளதே. அதையும் முயன்று பார்த்திருக்கலாமே, தேரர்..?
ReplyDelete