ஈரான் மீது நடவடிக்கை எடுக்க, வல்லரசு நாடுகள் கோரிக்கை
அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, அதிநவீன ஏவுகணை சோதனை நடத்திய ஈரான் மீது ஐ.நா சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வல்லரசு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த ஜூலை மாதம் 14–ந் தேதி, ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில், அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் செய்து கொண்டது. நீண்டகால இழுபறியில் இருந்த இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததால், இது வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என வர்ணிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்காது என்றும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடைகள் விலக்கிக்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அதிரடியாக தொலைதூரத்திற்கு சென்று எதிரியின் இலக்கை மிகத்துல்லியமாக வீழ்த்தக்கூடிய ஏவுகணை சோதனை ஒன்றை கடந்த அக்டோபர் 10-ம் தேதி ஈரான் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. ஈரானின் இந்த ஏவுகணை சோதனை உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை அளித்தது.
இந்நிலையில் ஈரான் நடத்திய ஏவுகணை சோதனை மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை வேண்டும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் ஐ.நா.வின் விதிமுறைகளை ஈரான் மீறியுள்ளதாகவும் இந்த நாடுகள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளன.
ஈரான் மீது யுத்தம் தொடுக்க முடிவு செய்யப்பட்டால், இன்னொரு முஸ்லிம் நாடான சவூதி அரேபியா அதற்கான முழுச் செலவுகளையும் பொறுப்பு ஏற்றுக்கொண்டாலும், ஆச்சரியம் இல்லை.
ReplyDeleteMr. Nilavan Marks only knows what is going on these few decades. But their is a history to be studied to know reality of different nations and their targets, regarding which you have littel or no idea.
ReplyDeleteWhat you see and hear is not always correct.
ஈரான் என்பது கேடான ஒரு சைத்தானிய நாடு ஆகும், அது வழிகேடான ஷியா கொள்கையை பரப்பி வருகின்றது, அதனை வெற்றி கொண்டு சத்திய இஸ்லாத்தை நிலைநாட்டுவது கலிமா சொன்ன ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை. அதனை சவூதி செய்தாலும், பாக்சிதான் செய்தாலும் ஒவ்வொரு முஸ்லிமும் பங்குகொல்வான்.
ReplyDelete