இறக்காமம் பிரதேச மக்களின் குறைகளை, கேட்டறிந்தார் பைசால் காசிம்
-மு.இ.உமர் அலி-
சுகாதார ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிம் இறக்காமம் பிரதேசத்திற்கு விஜயம் செய்து மக்கள் குறைகளை கேட்டறிந்தார். மக்களுடனான சந்திப்பு இறக்காம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இறக்காம் பிரதேச மத்திய குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இறக்காமம் பிரதேச வைத்தியசாலைக்கும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கும் சென்று அங்கு நிலவும் குறைகளை கேட்டறிந்தார். அத்துடன் அவ்வைத்தியாசாலையின் விடுதி திருத்த வேலைகளுக்கு உடனடியாக ஒரு மில்லியன் ரூபா நிதியினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.
Post a Comment