நீதிபதியின் மேசையில் விழுந்த பாம்பு - கடுவலை நீதிமன்றத்தில் பரபரப்பு
கடுவலை நீதவான் நீதிமன்ற நீதிபதியின் மேசை மீது கூரையிலிருந்து பாம்பு ஒன்று விழுந்த திடீர் சம்பவத்தால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று வியாழக்கிழமை (22) கடுவலை நீதிமன்ற நடவடிக்கைகள் வழமை போன்று ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதன் காரணமாக நீதிமன்றத்தினுள் ஏற்பட்ட களேபரத்தை அடக்கி, அமைதிப்படுத்த நீதிமன்ற முதலியார் கடுமையான பிரயத்தனம் எடுக்க வேண்டியிருந்தது.
அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகளும் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் பாம்பு நீதிமன்ற ஊழியர்களால் வெளியேற்றப்பட்ட பின்னர் நீதிமன்றம் வழமைபோன்று செயற்பட்டது.
நீதிபதியின் மேசை மீது கூரையிலிருந்த விழுந்த பாம்பு, இரத்தம் குடிக்கும் மாபிலா வகை பாம்பு என்று தெரிய வந்துள்ளது.
பாம்பை ஏன் கைது செய்ய வில்லை? நீதிபதியை கொலை செய்ய முயட்சித்தட்காக
ReplyDeleteYes u rcorrect. Why not arrest.n fine the snack. I Thing in the law of Sri Lanka don't have verdict.so ???
DeleteSmart joke
Deleteபாம்பு சிறு பான்மையா என்ற விசாரணை முடியவில்லை முடிந்தவுடம் DNA சோதனைக்கு உட்படுத்தும் வேலை ஆரம்பமாகும் அதன் பின் பாம்பு எந்த கட்சி என்று பார்த்துத்தான் நடவடிக்கை எடுக்கப்படும்.
ReplyDelete