புத்த பிக்குவின் இறுதிக்கிரியையில், முஸ்லிம்களின் பங்களிப்பு - பௌத்தர்களிடம் பெரு வரவேற்பு (படங்கள்)
கெலிஓயா ஸ்ரீ ஜனரன்ஜனாராம விகாரையின் பிரதம தேரர் பஞ்ஞானரத்னவின் இறுதிக்கிரியைகளில் கெலிஓயா முஸ்லிம்களின் வழங்கிய பங்களிப்பு கெலிஓயா பகுதி பௌத்தர்கள் மத்தியில் பெரு வரவேற்பைப் பெற்றுக் கொண்டது.
கெலிஓயா நகரின் பிரதான விகாரைகளில் ஒன்றான ஸ்ரீ ஜனரன்ஜனாராமயின் பிரதம தேரர் பஞ்ஞானரத்ன கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். இதனைத் தொடர்ந்து கெலிஓயா பகுதி முஸ்லிம்கள் விகாரைக்கு சென்று துக்கத்தைப் பகிர்ந்து கொண்டதுடன் தமது பங்களிப்புக்களையும் வழங்கியுள்ளனர்.
அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விகாரைக்கு சென்று தேரருக்கு இறுதி மரியாதை செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மறைந்த தேரரின் இறுதிக் கிரயைகள் இன்று நடைபெற்றதை முன்னிட்டு கெலிஓயா நகரில் சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. அத்துடன் உடுநுவர பகுதி பள்ளிவாசல்களில் இருந்தும் பள்ளிவாசல் நிர்வாகிகள் விகாரைக்கு சென்று உதவிகளை வழங்கியுள்ளதுடன் கெலிஓயா நகர வர்த்தகர்கள் இன்று இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்ளும் சகலருக்கும் பகலுணவை வழங்கியிருந்தனர். இதற்காக மூவாயிரத்திற்கும் அதிகமான உணவுப் பார்சல்கள் முஸ்லிம்களால் தயார் செய்து வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று பிரதம தேரரின் பூதவுடல் இறுதிக்கிரியைகளுக்காக கெலிஓயா நகரில் எடுத்துச் செல்லப்பட்ட போது முஸ்லிம்களும் பூதவுடலை தாங்கிச் செல்வதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
ம்.....ம்.....ம்.....ம்.......
ReplyDeleteMasha allah
ReplyDeleteஇத்தகைய முன்மாதிரியை நாட்டின் சகல இனத்தவர்களோடும் நாம் முன்வந்து தொடருவோமாயின் பொதுபலசேன உள்ளடங்கலாக சகல மத அடிப்படைவாதிகளும் காயம் ஆறியதும் பொருக்குகள் உதிர்வதைப்போல படிப்படியாக செல்வாக்கிழந்து ஒழிந்து விடுவார்கள்.
ReplyDeleteVery good but Will it make any difference in increasing number of enemies of Islam ? I doubt it. Because I believe in prophets words.
ReplyDeleteThauban reported that the messenger of Allah said: "It is near that the nations will call one another against you just as the eaters call one another to their dishes." Somebody asked: "Is this because we will be few in numbers that day?" He said: "Nay, but that day you shall be numerous, but you will be like the foam of the sea, and Allah will take the fear of you away from your enemies and will place weakness into your hearts." Somebody asked: "What is this weakness?" He said: "The love of the world and the dislike of death." (Abu Daud)