Header Ads



மைத்திரியும் ரணிலும் பேச்சுநடத்தி, நெருக்கடியான நிலைமையை தவிர்க்க வேண்டும் - நவீன்

ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கான துறைகள் வர்த்தமானி மூலம் வெளியிடப்படாத காரணத்தினால் பல அமைச்சுக்களில் நெருக்கடியான நிலைமை உருவாகியுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கு பணிகளை ஒதுக்க அஞ்சுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த காலத்தில் தான் இவ்வாறான நிலைமையை எதிர்நோக்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே துறைகளை வர்த்தமானியில் அறிவித்ததாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக இரந்த லக்ஷ்மன் கிரியெல்ல எந்த பேதமும் இன்றி துறைகளை ஒதுக்கியதாகவும் பிரதியமைச்சராக தான் உரிய முறையில் பணியாற்ற முடிந்ததாகவும் திஸாநாயக்க நினைகூர்ந்துள்ளார்.

சில அமைச்சர்கள் இவ்வாறு நேர்மையாக பணிகளை ஒதுக்க மாட்டார்கள் என்பதால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.