பார்வைக் குறைபாடுடையவராக, நடந்துசென்ற முதலமைச்சர் (படங்கள் இணைப்பு)
-JM.Hafeez-
எதிர் வரும் 15ம் திகதி கொண்டாடப்பட உள்ள சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் தொடர்பாக இலங்கை தேசிய கண்பார்வையற்றோர் சங்கத்தின் மத்திய மாகாணக்கிளை நான்காவது வருடமாகவும் ஒழுங்கு செய்த நினைவுதின பாத யாத்திரை ஒன்று (13.10.2015) இடம் பெற்றது.
மத்திய மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் இதில் பங்கு கொண்டதுடன் மத்திய மாகாண முதலமைசசர் சரத் ஏக்கநாயக்கா பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டார். கண்டி மாநகர சபை முன்பாக இருந்து ஆரம்பமாகி சிறுவர் நூலகம் வரை இது இடம் பெற்றது.
இங்கு பார்வைக் குறைபாடுடையவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. இங்கு முதலமைச்சர் குறிப்பிட்டதாவது-
எனது வேண்டுகோளை அடுத்து பார்வைக்குறைபாடுடையோர் சங்க அங்கத்தவர் ஒருவருக்கு தொழில் ஒன்று வழங்குவதற்கு கண்டி மாநகர சபை எடுத்து நடவடிக்கை குறித்து நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். பார்வைக்குறைபாடுடையோர் எதிர்கொள்ளும் சிரமங்களை சுமார் 45 நிமிடங்களாக இன்று என்னால் அவதானிக்க முடிந்தது. உங்களது சங்கத்தால் விடுக்கப் படும் வேண்டுகோள்களை எம்மால் தட்டிக்கழிக்க முடியாது. இது நற்பிற்கும், உறவு முறைக்கும் அப்பாற் பட்டது. அதற்கு சாதகமான பதிலைத் தர நாம் கடமைப்பட்டுள்ளோம்.
பார்வைக்குறைபாடுடையவர்களது பிள்ளைகளின் தேவையில் ஒரு பகுதியை நிறைவேற்ற நாம் அவர்களுடன் இணைந்துள்ளோம் என்பதை இங்கு குறிப்பி;டாக வேண்டும்.
இன்று நாட்டில் சில கசப்பான சம்பவங்கள் இடம் பெறுகின்றன. அதன் அலங்கோலத்தை காணாமல் இருக்க ஒருவகையில் நீங்கள் புன்னியம் செய்தவர்கள். அந்தளவு அவலட்சன மான சில விடயங்களை நாம் தினம் தொலைக்காட்சிகள் மற்றும் ஏனைய தொடர்பு சாதனங்கள் மூலம் காண்கிறோம் என்றார்.
Post a Comment