Header Ads



முஸ்லிம் இனவாதத்தை, வேரோடு களைய வேண்டும் - பொது பலசேனா

கொழும்பு நகரில் தீவிர முஸ்லிம் இனவாதம் தலைவிரித்தாடுவதாக பொதுபலசேனா அமைப்பு கடுமையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் செயற்பட்டு வருவதாக பொதுபல சேனா நீண்டகாலமாக முன்வைத்து வரும் குற்றச்சாட்டு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் தேசிய அரசாங்கத்தின் தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன், கொழும்பில் முஸ்லிம் இனவாதிகள் இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு பார்பர் வீதி கோயிலின் தேர்த்திருவிழாவை இந்த இனவாதிகள் தடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் கோயிலின் நிர்வாகக் குழுவினருக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனாவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணை நடத்தி கொழும்பில் செயற்படும் முஸ்லிம் இனவாதத்தை வேரோடு களைய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிலந்த விதானகே தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. You are right imthiyas. Some uneducated Muslims created this problem. BBS using that.

    ReplyDelete
  2. Muslim community and People of Manoganesan together... we do not listen to BBS racist.

    BBS is trying to enjoy making a conflict between Muslims and Tamils in Colombo. I hope our people will not open door for this cults

    ReplyDelete
  3. அந்த சம்பவம் எவ்வாறு உருவானது என்று எனக்குத் தெரியாது? அவ்வாறான ஓர் மாற்று மதச் சடங்கை தனது அதிகாரத்திற்கு உட்படாத (முஸ்லிம்களுக்கு உரிய பகுதிகளில்) செய்துகொள்வதற்கு தடையாக எந்த முஸ்லிம் இருந்நதானோ அவன் இஸ்லாத்தை சரியாக விளங்கவில்லை என்பதுதான் பொருளே அன்றி அதற்கு இயக்க முத்திரை குத்தி உங்கள் பல்லைக் குத்தி மற்றவனுக்கு முகரக் கொடுக்க வேண்டாம் மனோகனேசன் கடந்த காலங்களில் முஸ'லிம்களுக்காக குரல் கொடுத்த நல்ல மனிதன் அவருக்காக கடந்த காலங்களில் முஸ்லிம்கள் வேதனைப்படும் போது பலசேனாவூடன் கூட்டுச் சேர்ந்து முஸ்லிம்களை ஒடுக்க நினைத்த இந்து மாமன்றத்தையூம் நாம் மறக்கவில்லை அனைத்து சமுகத்திலும் மடையர்கள் இருப்பார்கள் விளங்காதவரக்ள இருப்பார்கள் இதை பெரிதுபன்னாமல் அதை அரசியலாக்கி துhக்கிப்பிடிக்கும் இந்த பாலசேனாவிற்கு பயந்து முட்டைக்குள் புகும் சமுகமாக இருக்க வேண்டிதில்லை 40 வருடங்களாக உலக வல்லரசு இஸ்ரேலுடன் போராடும் பலஸ்தீனர்களும் நம் இனம் தான் பயம் விழுத்தி விழுத்தி சமுகத்தை கூனிக்குறுகவைக்காமல் தப்பு நடந்தால் மன்னிப்புக் கேழுங்கள்க்ள கேட்கச் சொ;லலுங்கள் அதைவிடுத்து இந்த பலசேனா பூச்சாண்டி காட்டியது போதும்

    ReplyDelete
  4. Absolutely you are correct

    ReplyDelete

Powered by Blogger.