ஜவ்பர்கானுக்கு சாஹித்திய விருது
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
சிரேஷ்ட ஊடகவியலாளரும்இ தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கான் 2015ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சாஹித்திய விருதை வென்றுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெளியான நூல்களுள் சிறந்த நூலாக கவிஞர் ஜவ்பர்கான் எழுதிய முறிந்த சிறகும் என்வானமும் கவிதை நூல் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக படைப்பிலக்கியவாதியாகவும், முழு நேர ஊடகவியலாளராகவும் செயற்பட்டுவரும் ஜவ்பர்கான் நூலிற்காக தேசிய சாஹித்ய மண்டல விருதை வென்றவராவார்.
8 நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட விருதுகளையும் வென்றுள்ளதோடு பல்வேறு போட்டிகளில் முதலாம் இடம் உட்பட பரிசில்களை வென்ற இவர் பல கவியரங்குகளிலும் பட்டிமன்றங்களிலும் பங்கு கொண்டவராவார்.
இவர் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் முன்னணி ஊடகங்களில் முழு நேர ஊடகவியலாளராக பணியாற்றிவருகின்றார்.
இம்மாத இறுதியில் கிழக்கு மாகாண சபையால் நடாத்தப்படும் மாகாண இலக்கிய விழாவில் இவருக்கான விருதும் கௌரவமும் வழங்கப்படவுள்ளதாக மாகாண கலாசார பணிப்பாளர் ஏ.எல்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment