ஓய்வு பெற்றுச்செல்லும் தாஜுதீன் ஆசிரியர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
-நிஸ்மி கபூர்-
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் விஞ்ஞான பட்டதாரி கணித ஆசிரியராகவும், உதவி அதிபராகவும், பதிவாளராகவும் சேவையாற்றி தனது 39 வருட ஆசிரிய சேவையிலிருந்து கடந்த புதன்கிழமை (14.10.2015) ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.எம்.தாஜுதீன் ஆசிரியர் ஓய்வு பெற்ற அன்றைய தினமே அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்லூரி ஆசிரிய சமூகத்தினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.சஹாப்தீன தலைமையில் நடைபெறற இப் பாராட்டு வைபவத்தில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்-ஷேய்க் ஏ.எல்.எம்.காஸீம், கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.அஹமட் கியாhஸ், ஓய்வு பெற்ற இக் கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.ஏ.உதுமா லெவ்வை, ஓய்வு பெற்ற முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.எம்.நஜுமுதீன், அதிபர் ஏ.ஜி.அன்வர், பிரதி அதிபர் எம்.எம.எம்.மீராசாஹிப், உதவி அதிபர் றிபாஸ். ஏ. அஸீஸ், பாடசாலை அபிவிருத்திக் குழுச் செயலாளர் ஏ.ஜி.அப்துல் கபூர், முன்னாள் செயலாளா என்.எம்.நஜுமுதீன் ஆகியோர் கலந்து கொண்டு ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.எம்.தாஜுதீன் ஆசிரியர் அவர்களின் அர்ப்பணிப்புடனான சேவையைப் பாராட்டி உரையாற்றினார்கள்.
இதன்போது ஆசிரியரின் சேவையைப் பாராட்டி கல்லூரி அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு, பொற்கிழியும் வழங்கினார்.; ;வாழ்த்;துப் பத்திரமும் படி;த்து வழங்கப்பட்டது வலயத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களினாலும் பரிசுகள் வழங்கப்பட்டன. அத்;துடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட பரிசுப் பொருளும் வழங்கப்பட்டன. தாஜுதீன் ஆசிரியரின் ஏற்புரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
இந் நிகழ்வில் கல்லூரி உதலி அதிபர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், பாடசாலை அபிவிருத்திக் குழு அஙகத்தவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், தாஜுதீன் ஆசிரியரின் குடும்ப உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment