Header Ads



ஜனாதிபதி செயலகத்தில் இயங்கிய, மகிந்த ஆதரவு தொலைக்காட்சி (படங்கள்)

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தினுள் சீஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவலகம் ஒன்றும் இயங்கி வந்துள்ளமை இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இந்த அலுவலகம் ஜனாதிபதி சர்வதேச ஊடகப் பிரிவு என்ற பெயரில் இயங்கிவந்துள்ளது.

நாமல் ராஜபக்ஷ, யோஷித்த ராஜபக்ஷ, மற்றும் சில யுவதிகள் மட்டுமே இங்கு வந்துபோயுள்ளனர்.

எனினும் ஜனாதிபதி ஊடகப் பிரிவுடன் எந்த வகையிலும் தொடர்புபடாத நிலையில் இயங்கி வந்த இந்த அலுவலகத்தின் மூலம் நடைபெற்ற பணிகள் குறித்து யாரும் அறிந்திருக்கவும் இல்லை.

இந்நிலையில் இன்று குறித்த அலுவலகத்தின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது, அந்த அலுவலகம் யோஷித்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான சீஎஸ்என் தொலைக்காட்சிக்குரிய அலுவலகமாக செயற்பட்டு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையில் இருந்த ராஜபக்ஷவினர் தொடர்பான அனைத்து கோவைகளும் அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், இந்த அலுவலகம் மாத்திரம் ராஜபக்ஷவினருக்கு மறந்து போயுள்ளதாக அனுமானிக்க முடிகின்றது.

ஏனெனில் இங்கு சீஎஸ்என் தொலைக்காட்சியின் கோப்புகளும், ஒளிபரப்பு தட்டிகளும் நூற்றுக் கணக்கில் குவிந்து கிடக்கின்றன.

சீஎஸ்என் நிறுவனம் அரச வளங்களை பயன்படுத்தி நடாத்தப்பட்டு வந்துள்ளமை இதன் மூலம் மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகியுள்ளது.





2 comments:

  1. ஆட்சி மாறி பத்து மாதம் ஆச்சு, இப்பொளுதுதானா கண்டுபிடிக்கிறாங்கள்?

    ReplyDelete
  2. கண்டு பிடித்து கண்டு பிடித்து என்ன மயிரைப் பிடுங்கப் போறீங்க. ஆயிரக் கணக்கில் கண்டு பிடிச்சிட்டிPங்க. கள்ளன் எல்லாம் வெளியே தானே சுத்துறான்கள். இன்டைக்கு உள்ள போனால் நாளைக்கு பிணையில வெளியில வர்ரான்கள். இது என்ன வேடிக்கை?

    ReplyDelete

Powered by Blogger.