Header Ads



இந்திய 'றோ' உளவுப்பிரிவின், முழுக் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் - அநுரகுமார

யாழ்ப்பாணம் முழுமையாக இந்தியா வின் 'றோ' உளவுப் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டு அங்கு அரசியல் ஸ்திரமில்லா நிலைமையை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவ தாக குற்றம் சாட்டிய ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க, இந்தியாவோ அமெரிக்காவோ தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கப்போவதில்லை என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இலங்கை தொடர்பான ஐ.நா.அறிக்கை மற்றும் ஜெனிவா தீர்மானத் தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அநுர குமார திஸா நாயக எம்.பி இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற் றுகையில்,

ஐ.நா.இன்று அமெரிக்காவினதும் மேற்குலக நாடுகளினதும் தேவைகளை நிறைவேற்றும் சபையாக மாறிவிட்டது. இலங்கை விடயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் தமது அரசியல் பொருளாதார நலன்களை முன்வைத்தே அரசியல் நகர்வுகளை மேற்கொள்கின்றன. ஒரு போதும் அந் நாடுகளுக்கு தமிழர்கள் மீது அக்கறை கிடையாது.

இந்தியா வடக்கில் பல அபிவிருத்தி திட் டங்களை, வேலைகளை முன்னெடுத்தது இதன் போது வடக்கை சேர்ந்த இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கியதா? இல்லை. மாறாக திருகோணமலை எண்ணெய் குதங்களை, சம்பூரை தமது பொருளாதார தேவைகளை நிறைவேற்ற கைப்பற்றியது.

யாழ்ப்பாணம் இன்று இந்தியாவின் 'றோ' உளவுப் பிரிவின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் 'றோ' உளவுப் பிரிவின் நடமாட்டங்கள். அங்கு ஸ்திரமில்லா நிலைமையை ஏற்படுத்தி இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதிலேயே அக்கறை செலுத்தப்படுகிறது.

எனவே, இந்தியா தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும். ஐ.நா.வையோ இந்தியாவையோ அமெரிக்காவையோ கூட்டமைப்பு நம்புவதில் பயனில்லை என்றும் அநுர குமார திஸாநாயக எம்.பி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.