"இலங்கையில் என்ன உணவு, வழங்கப்படுகின்றது என தோன்றுகின்றது"
இலங்கை நாடாளுமன்றில் வழங்கப்படும் உணவு குறித்து திருப்தி அடைய முடியாது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையில் என்ன உணவு வழங்கப்படுகின்றது என தோன்றுகின்றது. நான் உலகின் பல நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கும் சென்றிருக்கின்றேன்.
பாரியளவில் செலவிடப்படுகின்றது. அந்த நாடாளுமன்றில் வழங்கப்படும் உணவுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையில் அவ்வாறான நிலைமை இல்லை. மிகவும் தரமுயர்ந்த உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறியளவு தொகையையே செலுத்துகின்றனர். சில இடங்களில் இலவசமாக வழங்கப்படுகின்றது. எந்தவொரு பணமும் அறவீடு செய்யப்படுவதில்லை.
ஆண்டுக்கு ஆண்டு பொருட்களின் விலை உயர்வடையும் போது நாடாளுமன்றின் உணவுப்பொருட்களின் விலையும் உயர்வடைகின்றது.
புதிதாக விலையை ஏற்ற வேண்டியதில்லை. ஆரம்ப காலத்தில் போன்று இப்போது நாடாளுமன்றில் உணவு வகைகள் தரமாக இல்லை.
அந்தக் காலத்தில் பேகன், சொசேஜஸ் மற்றும் பன்றி இறைச்சி வழங்கப்பட்டது. தற்போது அவ்வாறு இல்லை.
வெள்ளைக்காரர்களின் காலத்தில் மதுபான வகைகளும் இருந்தன. நாடாளுமன்றம் செல்லும் மன் சற்று மது அருந்தியதன் பின்னரே நாடாளுமன்றம் செல்வார்கள் என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மாட்டிறைச்சி உண்பது சரி என்றால், பேகன், பன்றி இறைச்சி உண்ண விரும்புகின்றவர்களுக்கு அவை வழங்கப்படல் வேண்டும்.
ReplyDelete