மர்ஹும் அஷ்ரபின் பிறந்த தினத்தை முன்னிட்டு, இளைஞர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அம்பாரை மாவட்டத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் மாநாடு தொடர்பாக நாவிதன்வெளி பிரதேச இளைஞர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு மத்தியமுகாம் 12ஆம் கொளனி சாஹிராபாலர் பாடசாலைமண்டபத்தில் இன்று இரவு நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச மத்தியகுழுவின் அமைப்பாளர் ஏ.சீ.நஸார் ஹாஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்குமாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மர்ஹ_ம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஞாபகார்த்த விருது வழங்கல் மற்றும் கட்சி எதிர்கொள்ளும் சவால், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவாலுக்கு கட்சி செலுத்தி வரும் வாகிபாகங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக இளைஞர்களுக்கு விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் அஸ்-ஸிறாஜ் மகாவித்தியால அதிபர் எஸ்.எம்.எம்.யூசுப், சவளக்கடை மத்தியகுழுவின் தலைவர் ஏ.அஸீஸ், செயலாளர் ஏ.எல்.ஜலீல், 12ஆம் கொளனி, சாளம்பைக்கேணி மத்தியகுழுவின் தலைவர் ஏ.எச்.மஹ்ரூப், செயலாளர் ஏ.முகைதீன் ஹாஜியார், மத்தியகுழுக்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், விளையாட்டுகழகம், இளைஞ்ர் கழகங்களின் பிரதிநிதிகள், புத்திஜீவீகள் எனபலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது நாவிதன்வெளி பிரதேச இளைஞர்களை எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் மாநாட்டில ஒழுங்கமைப்பதற்காக இளைஞர் அமைப்பாளராக எம்.பி.நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மாநாடு நிறைவு பெற்றவுடன் நாவிதன்வெளி பிரதேசத்திற்கான இளைஞர் அமைப்பாளர் உள்ளிட்டநிர்வாகம் அமைக்கப்படும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
aver da birth day dec 23
ReplyDeleteA party staging BIDA in the name of remembering its leader... has no eligibility to lead Muslims..who are supposed to oppose BIDA to protect the pure form of our DEEN.
ReplyDelete