Header Ads



கண்ணீரை சிந்தவைக்கும் நேர்மை - சவூதி அரேபியாவில் நடைபெற்ற உண்மைச் சம்பவம்..!

சவூதி அரேபியாவைச் சார்ந்த ஒருவர் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் அந்த நிறுவனத்தில் இருந்து விலகிவிட்ட பிறகு அந்த நிறுவனம்

தவறுதலாக இவரின் வங்கி கணக்கிர்கு ஓரு இலட்சம் சவுதி ரியால்களை அனுப்பிவிட்டது (சுமார் 17 லட்சம் இந்திய ரூபாய்)

தனது கணக்கில் ஒரு இலட்சம் ரியால் வந்ததை கண்ட அந்த மனிதர் அது தமக்கு உரியதல்ல என்பதை உறுதி படுத்தியதும் அந்த பணத்தை வங்கி கணக்கிலிருந்து விடுவித்து உரிய நிறுவனத்தை தேடி சென்று ஒப்படைத்தார்

அவர் அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்து விட்டு பணம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என கூறிவிட்டு சொன்ன வார்த்தைதான் கவனத்தில் கொள்ளதக்கது

ஆம் அவர் சொன்னார்...

ஹாலாலான 1000 ரூபாய் என்பது ஹராமான கோடி ரூபாயை விட சிறந்ததாகும் எனது இறைவன் ஹலாலை மட்டுமே அனுமதித்துள்ளான். ஹராமை தடை செய்திருக்கிறான் எனவே இறைவனுக்கு அஞ்சி என்னிடம் வந்து சேர்ந்த எனக்கு ஹராமான பணத்தை உரியவரிடம் சேர்த்துவிட்டேன்..


2 comments:

  1. அல்லாஹ்வின் சோதனையில் வெற்றி பெற்றால் அதுவே பெரும் பாக்கியம்.

    ReplyDelete
  2. Its great to listen and do

    ReplyDelete

Powered by Blogger.