கவிக்கோ அப்துல் றகுமானின் பவளவிழா, இலங்கையிலிருந்து ரவூப் ஹக்கீம் தலைமையில் குழு
மேற்படி பவளவிழா தமிழ் நாடு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் எதிர்வரும் 26ஆம், 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள மலேசியா, சிங்கபூர், சவூதி அரேபியா, பேங்கொக், மஸ்கட், அபுதாபி, தமாம், அமெரிக்கா இலங்கை போன்ற நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பினை ஏற்று இலங்கையில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவொன்று அங்கு செல்லவுள்ளது.
இப்பெருவிழாவின் தொடக்க உரையை ரவூப் ஹக்கீம் அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.
மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அவர்கள் வாழ்த்துக் கவி படிக்கவுள்ளார்.
இஃதே போல டாக்டர் தாஸிம் அகமது, முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸனலி, கம்பவாரிதி ஜெயராஜ், கம்பன் கழகத் தலைவர் ஈஸ்வரன் ஆகியோரும் கலந்து வாழ்த்துரை வழங்க உள்ளார்கள். அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அல்ஹாஜ் அஸ்லம், முத்தலி பாவா பாரூக் உடன் புரவலர் அப்துல் கையுமும் அழைக்கப்பட்டுள்ளனர். கல்முனை மாநகரசபை மேயர் நிஸாம் காரியப்பரும் அவரது பாரியரும் இப்பெருவிழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
கவிக்கோ கரூவூலம் இலக்கியக் கலைக்களஞ்சியம் மொழி பெயர்க்கப்பட்ட கவிக்கோவின் நூல்கள், கஸல் கவிதைகள், நேர்காணல், குறுந்தகடு ஆகியவையும் வெளியிட்டு வைக்கப்படும். கவிக்கோ கருவூலம் இலக்கியக் கலைக்களஞ்சியத்தை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் வெளியிட்டு வைத்து கவிக்கோ அறக்கட்டளைக்குப் பொற்கிழி வழங்கி நிறைவுரையாற்றவுள்ளார். நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுள் ஒருவராக பி.எச். அப்துல் ஹமீதும் கலந்து கொள்கின்றார்.
தயாரிப்பு – டாக்டர். தாஸிம் அகமது
Post a Comment