அடிக்கல் நாட்டினார் ஹரீஸ்
(எம்.எம்.ஜபீர்)
தெஹியத்தக்கண்டி முறுத்தகஸ்பிட்டிய விகாரையில் அமைக்கப்படவுள்ள பௌத்த போதனை மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (27) முறுத்தகஸ்பிட்டிய விகாரையின் பொறுப்பதிகாரி பதவிய சமீத்த ஹிமி தலைமையில் நடைபெற்றது.
இவ் வைபத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் தேசிய நீர்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரின் தெஹியத்தக்கண்டி இணைப்பு செயலாளர் எம்.எஸ்.ரவூப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெஹியத்தக்கண்டி இணைப்பாளர் ரணவீர திஸாநாயக்க, பௌத்த தேரர்கள், பிரதேச பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இப்படியே மெல்ல மெல்ல மதத்தையும் மாற்றினால் எதிர்காலத்தில் மிகக் கூடுதலான வாக்குகள் பெறலாம் என்ன கேடுகெட்ட அரசியலோ
ReplyDeleteபதவிக்காக இதுவல்லாம் செய்ய வேண்டுமா?இவார் போகாவிட்டாளும்பிரச்சினை இல்லை இது ஒரு விளையாட்டு சம்மந்தமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு என்றால் பரவாயில்லை.விளையாட்டு துறை அமைச்சருக்கு இது தேவைதானா ? அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக அமீன் .
ReplyDeleteமுஸ்லீம்அரசியல் வாதிகள் முஸ்லீம்களூக்கு மட்டும்தான் செய்யவேன்டுமென்ரு முஸ்லீம்கள் எதிர்பார்ப்பது தவரு இவரது செயள் மதங்கலிடையில் நல்லுரவை ஏற்படுத்தும் செயலென்ருதான் நாம் நோக்கவேன்டும் மாராக இப்படியான விமர்ச்சனங்கள் கூடாது
ReplyDelete