கனேடிய தேர்தலில், முஸ்லிம் விரோத போக்கு
கனடா தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி வாரத்தில் ஸ்டீபன் ஹார்பரின் ஆளும் கன்செர்வேடிவ் கட்சி, முஸ்லிம் விரோத போக்கையும், இனவாத மேலோட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
ஆனால் கனடாவின் ஜனநாயகம் தடுமாறும் என நம்ப முடியவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி வாரத்தில் ஸ்டீபன் ஹார்பரின் ஆளும் கன்செர்வேடிவ் கட்சி, முஸ்லிம் விரோத போக்கையும், இனவாத மேலோட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
கனடிய பிரதமரின் பகிரங்கமான முஸ்லிம் விரோத, இஸ்ரேல் ஆதரவு அறிக்கைகளும், கனடிய மக்கள் தங்கள் அண்டை நாட்டினரை கூர்ந்து அவதானிக்க வேண்டும் என அவரது குடியேற்ற அமைச்சரின் பேச்சுக்களும், தேர்தல் முடிந்து ஒக்டோபர் 19-ன் பின்னர் என்ன மாதிரியான நாட்டில் அவர்களின் குழந்தைகள் வாழப்போகிறார்கள் என்ற கேள்வி வாக்காளர்களுக்கு முன் எழுந்துள்ளது.
கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தேசிய ஜனநாயக கட்சி மற்றும் இதர கட்சிகளை விடவும் ஹார்பருக்கு ஆதரவாகவே உள்ளது. ஆனாலும் கன்சர்வேடிவ் கட்சியினர் சிறுபான்மை அரசையே நிறுவ சாத்திய கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Niqab குறித்த விவாதங்கள் இந்த தேர்தலில் நாட்டில் நிலவும் பல முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பியது.
சில ஊடகங்கள் பகிரங்கமாகவே எச்சரிக்கையும் விடுத்தது. முகத்திரை அணிவது ஒரு விடயம் என்றால் கண்ணை மூடிக்கட்டுவது இன்னொன்று என்றது.
கனடாவின் பாதுகாப்பிற்கு எவ்வித பங்கமும் வரக்கூடாது என 71 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்த போதும், சிரியாவில் இருந்து வரும் அகதிகளை அவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்பதை அரசு உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகலை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலை கண்மூடித்தனமாக ஹார்ப்பர் ஆதரிப்பதாக கருத்து தெரிவித்துள்ள விமர்சகர்கள், கடந்த ஆண்டு காஸா பகுதியில் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு ஒரு முறை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை என்றனர். இது கனடாவில் உள்ள யூத வாக்குகளை அறுவடை செய்யவே என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹார்ப்பர் ஒரு சிறந்த அறிவாளி எனவும் அவரது மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்வதில்லை என முன்னாள் வெளிவிவகாரத் துறை அமைச்சர் John Manley தெரிவித்துள்ளார்.
கனடாவில் இருக்கும் சிறுபான்மை யூதர்களுக்காக ஹார்ப்பர் இன்னும் பேசவில்லை என்றால், கனடாவின் நிபந்தனையற்ற ஆதரவை இஸ்ரேலுக்கு தெரிவித்திருக்கிறார் எனில், அவர் தனது தனிப்பட்ட நம்பிக்கைகளை முன்னிறுத்தியே கனடாவின் வெளிவிவகார கொள்கையை முன்னிறுத்துகிறார்.
பாகுபாடு கொண்ட இதே நிலைப்பாடுதான் சிரியாவில் இருந்து வரும் இஸ்லாமிய அகதிகளை விட கிறிஸ்தவர்களை ஏற்றுக்கொள்ள கன்சர்வேடிவ் கட்சியினர் கைக்கொண்டனர்.
ஹார்ப்பரின் வெளிவிவகார கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வரும் Haroon Siddiqui, கடந்த ஆண்டு காஸா பகுதியில் இருந்து கடுமையாக பாதிப்புக்கு உள்ளான 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் தாற்காலிக அனுமதியை மறுத்தது குறித்து நினைவு கூர்ந்தார்.
மதம் மற்றும் கருத்தியல் ரீதியாக கனடியர்களை பிரித்தாளவே ஹார்ப்பர் தனது வெளிவிவகார கொள்கைகளை பயன்படுத்துவதாக Siddiqui கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த தேர்தலில் நாட்டில் உள்ள பொருளாதார சிக்கல்களை முன்வைக்காமல் இஸ்லாமியர் குறித்தே தேர்தல் பிரச்சாரங்களும் விவாதங்களும் நிலைகொண்டதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
Post a Comment