வசீம் தாஜூடினின் மரண வழக்கு, நாட்டு மக்கள் எதிர்பார்ப்புடன் இருப்பதாக நீதிபதி தெரிவிப்பு
றக்பி வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இந்த மரணம் தொடர்பான நீதிமன்ற மருத்துவ அறிக்கை தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாக குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தாஜூடீனின் கையடக்க தொலைபேசியின் தரவுகள் தொடர்பான அறிக்கையை கொழும்பு பல்கலைகழக ஆய்வு பிரிவினர் தமக்கு வழங்கியுள்ளதாக ரகசிய காவற்துறையினர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, கருத்து வெளியிட்ட நீதவான் பொறுப்பு விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
அதனையே நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.
entha december sir,romba kalam edukavendam reportkaludan ungalaiyum eduthuviduvarhal
ReplyDeleteHow long is piece of string?
Delete