"சேயா முகத்தைக் கடித்ததினால், கழுத்தை நெரித்து கொலைசெய்து நீரோடைக்குள் வீசினேன்"
துஷ்பிரயோகம் செய்யும்போது தனது முகத்தைக் கடித்த காரணத்தாலேயே கொட்டதெனிய சிறுமி சேயாவின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்ததாக கொண்டயாவின் அண்ணன் தெரிவித்துள்ளார்.
கொட்டதெனியாவ சிறுமி சேயா சந்தெவ்மியின் படுகொலை தொடர்பில் தற்போது கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த, அவரது அண்ணன் சமன் ஜயலத் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் சேயாவின் உடலில் காணப்பட்ட காயங்கள் மற்றும் தலைமுடி என்பவற்றோடு சமன் ஜயலத்தின் டி.என்.ஏ. பொருந்துவதாக நேற்றுநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நேற்றைய தினம் கொண்டயாவின் சகோதரர் சமன் ஜயலத் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவில்லை. எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ள வழக்கு விசாரணையின்போது கொண்டயா மற்றும் சமன் ஜயலத் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சிறுமி சேயாவின் கொலையை சமன் ஜயலத் செய்தார் என்பது உறுதியாகியுள்ள நிலையில், 19ம் திகதியே அவருக்கான தண்டனையும் அறிவிக்கப்படவுள்ளது.
இதற்கிடையே சேயாவின் அம்மாவை வன்புணர்வுக்கு உட்படுத்தும் நோக்கிலேயே அவர்களின் வீட்டுக்குள் பிரவேசித்ததாகவும், எனினும் அவரைப் பயமுறுத்த ஆயுதம் ஏதும் கிட்டாத காரணத்தினால் சேயாவை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாகவும் சமன் ஜயலத் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்போது சேயா தனது முகத்தைக் கடித்த காரணத்தினால் கழுத்தை நெரித்து கொலை செய்து, நீரோடைக்குள் வீசியெறிந்ததாகவும் சமன் ஜயலத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயங்கர கொலைகாரனை பகிரங்க மைதானத்தில் வைத்து எல்லா மக்களுக்கும் பொது அறிவித்தல் கொடுத்து தலையை வெட்டி எறிந்தால் குறைந்த பட்சம் இது போன்ற படுபாதகக் குற்றங்கள் ஓரளவுக்குக் குறைய வாய்ப்புண்டு.வேறு என்ன தண்டனையும் அவனுடைய படுபாதகக்குற்றத்துக்குத் தண்டனையாக ஏற்றுக் கொள்ள முடியாது.
ReplyDelete