Header Ads



விமல் வீரவன்ச, பிணையில் விடுதலை

இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை 10,000 ரூபா ரொக்கம் மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை செல்லுபடியற்ற கடவுச்சீட்டில் இத்தாலிக்கு புறப்பட்டு செல்வதற்காக முற்பட்டவேளை விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

2 comments:

  1. சாதாரண ஒருவர் இவ்வாறான குற்றச்சாட்டில் சிக்கி இருந்தால் அவருக்கு என்ன நேர்திருக்கும்?
    அவருக்கு நாட்டின் தலைவர்கள் அல்லது நீதியின் கருணை கிடைத்து இருக்குமா?

    සාමාන්‍ය පුරවැසියෙක් මෙවැනි වරදක් කළා නම් ඔහුට අත්වෙන තත්වය කුමක් විය හැකිද? රටේ නායකින්ගේ හෝ අධිකරණයේ කරුණාව ඔහුට ලැබෙයිද?

    ReplyDelete

Powered by Blogger.