ஷஹீத்தாகும் முன் எழுதிய கடிதம்..!
-Mazahim Mohamed-
கொல்லப்பட மூன்று தினங்களுக்கு முன்னர் ''ஜனாதிபதி'' அப்பாசுக்கு ஒரு கடிதம்....!
சில திங்களுக்கு முன்னர் மேற்கு கரையில் கொல்லப்பட்ட அல் குத்ஸ் திறந்த பல்கலைகழகத்தின் சட்ட பீட மாணவனான முஹன்னத் ஹலபி தான் இஸ்ரேலிய சியோனிச காவல் படையால் கொல்லப்படுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் பலஸ்தீன் நிர்வாக தலைவர் மஹ்மூத் அப்பாசுக்கு எழுதிய கடிதத்தில்,
"ஒரு அழகான வார்த்தை திரு ஜனாதிபதி, அவர்களே ,ஆனால் மன்னிக்கவும் ,எங்களுக்கு குத்ஸை கிழக்கு என்றும் மேற்கு என்றும் தெரியாது, எமக்கு எங்களிடம் பிரிக்கப்படாத ஒரு குத்ஸ் இருப்பது மட்டுமே தெரியும் அதன் ஒவ்வொரு பகுதியும் குத்ஸ் ஆகும் " என எழுதியுள்ளான்
ஜெருசலத்தை இரண்டாகவும் ,அதேபோன்று அல் குத்ஸ் மஸ்ஜித்தை இரண்டாகவும் பிரித்து விட அல்லது முழுமையாக யூத வழிபாட்டுக்கு மட்டுமாக எடுத்துகொள்ள இஸ்ரேல் முயன்றுவருவதாக நம்பப்படும் நிலையில் பலஸ்தீன ''ஜனாதிபதி'' அப்பாஸின் நிலைப்பாடுகள் காஸா மக்களுக்கு மட்டுமின்றி மேற்கு கரை மக்களுக்கும் மர்மமாகவே உள்ளது
Abbas oru us bomb
ReplyDelete