அரேபியர்களையும், யூதர்களையும் இணைக்கும் முயற்சியில் உணவகம்
பொதுவாக விருப்பமான உணவைப் பற்றிய பேச்சு ரெயில் பயணத்தின்போதே நல்ல நண்பர்களை அடைய உதவும் என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இதனை ஊர்ஜிதம் செய்யும் வகையில் இந்த இஸ்ரேலிய உணவக முதலாளி செயல்பட்டு வருகிறார்.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலிய நாட்டில் உணவகம் நடத்திவரும் கோபி ஸாப்ரிர் என்பவர் அரேபியர்களையும், யூதர்களையும் உணவின் மூலம் இணைக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளார்.
தனது உணவகத்துக்குள் ஒன்றாக ஒரே மேசையில் இணைந்து உணவு உண்ணும் அரேபியர்களுக்கும், யூதர்களுக்கும் அவர்களது விருப்பமான ஹம்மஸ் மற்றும் பலாபல் போன்ற உணவுகளை சுவைக்க தயாராக இருந்தால் அந்த உணவின் விலையில் ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என கோபி விளம்பரப்படுத்தி வருகிறார்.
மக்களிடையே சகிப்புத் தன்மையை அதிகரிக்கவும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டவும் இப்பகுதி மக்களின் விருப்பமான உணவான ஹம்மஸ் உதவும் என்கிற நம்பிக்கை இருப்பதாக கோபி தெரிவித்துள்ளார்.
இந்த உணவகம் சகிப்புத் தன்மையுள்ள அரேபியர்களையும், யூதர்களையும் இணைத்து தற்போது இப்பகுதி மக்களுக்கு பிடித்த இடமாக மட்டுமல்லாது, உலகம் முழுவதும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இது தொடர்பான பேஸ்புக் போஸ்ட்டில் ‘உணவைக் கொண்டு மக்களை இணைக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள். அன்பும், உணவும் நிச்சயம் உலகை வெல்லும்!’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரேபியர், முஸ்லிம்கள், யூதர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வாழும் இஸ்ரவேலியர், இந்த நான்கிற்கும் இடையிலான வேறுபாட்டை இஸ்லாமிய அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ReplyDeleteஅரபிகளின் அனைத்தும் இஸ்லாம் அல்ல, அதே போன்று யூதர்கள் எல்லோரும் இஸ்ரவேலியர்கள் அல்ல, இஸ்ரவேலியர்கள் எல்லோரும் அநியாயமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வாழ்பவர்கள் அல்ல.
யூதர்கள் என்றாலே அவர்கள் இஸ்ரவேலர்கள் மட்டுமே என்றும், எல்லா இஸ்ரவேலர்களும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் தான் வாழ்கின்றார்கள் என்றும் நினைப்பது தப்பு ஆகும்.