என்னை கைது செய்தமை சட்டவிரேதமானது - விமல் வீரவங்ச
தன்னை கைது செய்தமை தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தன்னை கைது செய்தமையானது சட்டவிரோதமானது எனவும் விமல் வீரவங்ச இதன் போது குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், விமல் வீரவங்ச, சட்டத்திற்கு அமைவாகவே கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
காவல்துறை தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
Post a Comment