Header Ads



பாலைவனச் சிங்கம், சத்தாம் ஹுஸைன்


பாலைவனச் சிங்கம்  சத்தாம் ஹுஸைன் தூக்கிலிடப்பட்டு 6 வருடங்கள் உருண்டோடிவிட்டன. கலிமா ஷ ஹாதாவான "லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்" வை தனது இறுதி வார்த்தையாக மொழிந்து உயிர் விட்ட அந்த மகத்தான மாவீரனை எண்ணிப்பார்க்கும்போது சில விஷயங்கள் வியப்பாகவே உள்ளது.

ஆம்! தூக்கிலிடப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் கூட அமெரிக்க உயர் அதிகாரிகள் அவரிடம் அமெரிக்காவுக்கு சாதகமான நிலையை அவர் தெரிவித்தால் அவரை தகுந்த மரியாதையோடு அவர் விரும்பும் வாழ்க்கையை அமைத்துத்தருவதாக வாக்குறுதி அளிக்க முன் வந்த போதும் அதை துச்சமென தூக்கியெரிந்து தூக்குமேடையை முத்த்மிட்ட அந்த வீர்ச் செயல் உலக வரலாறு வியப்புடன் பதிவு செய்துள்ளதை எவர்தான் மறக்க முடியும்!

ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரம் செலுத்தும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும், அதற்கு அடிமைப்பட்டுக்கிடக்கும் நாடுகளும் வரலாறு காணாத பெரும் படையுடன் முற்றுகையிட்டு மிரட்டியபோதும் கொஞ்சமும் அஞ்சாமல் எதிர்த்து நின்ற துனிவு அவரைத்தவிர இந்நூற்றாண்டில் எவருக்குமிருந்ததாகத் தெரியவில்லை.

போரில் வெற்றி தோல்வி என்பது சகஜம்! கைதான பின்பும் அவரது வீரம் சற்றும் குறையவில்லை. அதற்கு சான்று... நீதிமன்றத்தில் அவரது அனல் தெரிக்கும் வாதங்கள் உலகை அதிசயிக்க வைத்தன என்பதே உண்மை.

யூத நஸாராக்களின் சூழ்ச்சிக்கு கடைசீ வரை தலை சாய்க்காத கம்பீர மனிதராக சம காலத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு நாட்டின் அதிபர் என்றால் அது சந்தேகமில்லாமல் சத்தாம் ஹுஸைன் ஒருவர் மட்டுமே என்று சொன்னால் மிகையல்ல.

அவரது கடைசீ மூச்சாக அவரது உள்ளத்தில் உருவாகி, உதட்டில் வெளிப்பட்ட அந்த ஏகத்துவ மந்திரச்சொல் கலிமாவாம் "லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" வை உலக ஊடகங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒளி - ஒலி பரப்பச்செய்து அதற்கு இந்த ஒட்டுமொத்த உலகையே சாட்சியாக்கினானே ரப்புல் ஆலமீன் அல்லாஹ்! சத்தாம் ஹுசைனின் புகழை அல்லாஹ்வே உயர்த்திவிட்டாதற்கான சாட்சியல்லவா அது.

"எவர் ''லா இலாஹ இல்லல்லாஹ்" எனும் கலிமாவுடன் தனது கடைசீ வார்த்தையை முடித்துக்கொண்டாரோ அவர் சுவனவாசி" எனும் நபிமொழிக்கொப்ப சத்தாம் ஹுஸைன் சுவனவாசி என்பதை அல்லாஹ்வே இவ்வுலக மக்களுக்கு பரைசாற்றிவிட்டான் என்று கருத்துக் கொள்ளலாம் தானே!

- எம்.ஏ.முஹம்மது அலீ

4 comments:

  1. சாதாம்மெனும் ஒருமனிதனை நினைத்து எப்போதும் பயத்துடன் இருந்த அமெரிக்காவும் அதன் கூட்டாலிகலுமே அவரை எதிரியாய் பார்க்கத்தொடங்கின அந்தபயம் நீங்கவேன்டும் என்பதே அவர்களது நோக்கமும் அதற்கு அந்தகோலைகள் எடுத்தமுடிவுமே இந்தமாவீரனின் கொலை ஆனால் அப்போவும் நீங்கள் கோலைகளே என்பதை உயிரை துச்சமாக மதித்து துனிச்சலோடு நினைவுபடுத்தியவர் இந்தமாவீரனே காரனம் நீ கோலைஎன தலைசாய்ந்தால் நாங்கள் உனக்கு உயிர்பிச்சை கொடுத்தவீரனாகிவிடுவோம் என்பதே இவர்களது இருதிவரையான முயட்சி ஆனால் அது பூச்சியமாகிவிட்டது மேலும் இவரது மரணம் ஹஸ்ரத்பிழால்[ரழி]யின் வாழ்விழ் நடந்தசம்பவம் ஒன்ரையே ஞாபகமூட்டுகின்ரன கலீமாசொன்ன ஒரேகாரனத்துக்காக தனது எஜமானால் சொல்லொன்னா சித்திரவதைகள் செய்யப்பட்டு வீதிகள்தோரும் கட்டியிலுக்கப்பட்டு கொத்துயிரும் கொலைஉயிருமாய் நீ இந்தமார்க்கத்தை விட்டுவிடால் உன்னை உயிரோடு விடுவோம் என்ரு சொன்னபோதும் கலிமாவையே உறக்க சொன்ன பிழால்[ரழி]போன்ரு நெஞ்சை நிமிர்த்தி நின்ற சதாம்மெனும் வீரணீன் மருமைவாழ்வும் அல்லாஹ்வின் பொருத்ததுடன் இருக்க நாமும் பிறாத்திப்போம் அமீன்

    ReplyDelete
  2. சத்தாம் ஒரு துணிச்சல்காரர் என்பதிலே எள்ளளவும் சந்தேகமேயில்லை. ஆனால் அதற்காக அவர் ஒன்றும் நல்லவர் கிடையாது. தனது நாட்டின் சொந்த குடிமக்களான குர்திஷ் இன மக்களை விஷவாயு மற்றும் இரசாயத்தாக்குதலால் குழந்தைகள் பெண்கள் என்று பாராது கொலைசெய்தவர்தான் இந்தப் பாலைவனச் சிங்கம்.

    அதிபர் புஷ் சர்வதேசப் பயங்கரவாதி என்பதற்காக சத்தாம் ஒன்றும் மனிதகுலத்தை மீட்கவந்த இரட்சகரல்ல. நமது ராஜபக்ஷாவைப்போல அவரும் ஒரு கொலைகாரரே!

    ReplyDelete
  3. உங்கலுக்கு தெரிந்தவிடயம் அமெரிக்காவிட்கும் அதன் கூட்டாலிகலுக்கும் தெரிந்திருக்குமே ஆனால் 2தினங்கலுக்குள் இதே ஜப்னாமுஸ்லீம் செயதியில் அவர்கள் சொன்ன செய்தியை நீங்கள் படிக்கவில்லையா நாங்கள செய்ததவருக்காக மண்னிப்புகேட்டாலும் அது சிரியவிடயமே என்ரு. தவருசெய்யா மனிதகுலமே உலகில்கிடையாதம்மா ஆதம் அவ்வா தொட்டு உங்கள் தாய் தந்தை செய்ததவரினால்தான் நீங்கலும் வந்துள்ளீகள் அதற்காக அத்துமீரி நுலைந்து கொலைசெய்ய யாருக்கும் அருகதைகிடையாது உங்கள் கருத்துக்கள் எல்லாமே செய்திகலுக்கு தொடர்பான கருத்துக்கள் கிடையாது மாராக மற்றவர்கலை உசுப்பேற்ரி வேடிக்கை பார்க்கவேன்டும் என்ருநினைத்து செயல்படுகின்ரீர்கள் என்பதே உன்மை அதுமட்டுமல்ல மலேசியநாட்டு பெண்மனியுடைய போட்டொவை பதிவேற்ரி நானும் பெண்னெண்ரு நடித்துக்கொன்டிருக்கின்ரீர்கள் என்பதும் தெரியும் இந்தபென் கட்டாரில் குடும்பத்துடன் உள்ளார் கணவர் கட்டார் பெற்றோலிய கம்பனியில் வேலைசெய்கின்ரார் விபரம் போதும் என்ருநினைக்கின்ரேன் உங்க சுயவிருப்பத்தில் நான்தலையிடவில்லை ஏமாற்ருவேலைவேன்டாம்

    ReplyDelete
  4. I agree with Jasslya on this. Saddam was a man who torture many Muslims and killed innocents. More he had statues of himself.
    May be he would have changed when he was in custody. May allah forgive his sins but don't portray him as a patriot or King of the dessert rather he was a puppet of Mozart.

    ReplyDelete

Powered by Blogger.