கிணற்றுக்குள் இறங்கி முதியவரின் சடலத்தை, தூக்கிவந்த பாலித தெவரப்பெரும Mp
களுத்துறை மதுகம, வெலிபன்ன பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வெலிபன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான முதியவர் ஒருவர் நேற்று நண்பகல் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்திருந்தார்.
இது குறித்து திடீர் மரண விசாரணை அதிகாரிக்கு அறிவித்திருந்த போதிலும், அவரின் வருகை தாமதமான நிலையில் சடலமும் கிணற்றுக்குள்ளேயே இருந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
திடீர் மரண விசாரணை அதிகாரியின் தாமதம் குறித்து மாவட்ட அரசாங்க அதிபருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த பின்னர், தானே கிணற்றுக்குள் இறங்கி முதியவரின் சடலத்தை மேலே தூக்கி வந்துள்ளார்.
குறித்த முதியவரின் பிரேத பரிசோதனை இன்று நடைபெற்றுள்ள நிலையில் , நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் ஹம்பாந்தோட்டை பயணத்தின் போது பாதையில் தவித்த இரண்டு வயோதிபர்களுக்கு உணவும், கைச் செலவுக்கு பணமும் கொடுத்தது,
கோல்பேஸ் மைதானத்தில் கைவிடப்பட்டு தவித்த பெண்மணிக்கு ஆறுதல் கூறி நிதியுதவி அளித்தது போன்று பல்வேறு சம்பவங்களில் பாலித தெவரப்பெருமவின் மனிதாபிமானம் வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Excellent activist
ReplyDeleteThanks Dear Hon MP you are the real hero to me since Darha town attack , excellent,
ReplyDeleteExcellent one of the leader
ReplyDeleteExcelllent sir
ReplyDeleteExcelllent sir
ReplyDelete