வட் வரி போய், வணிக வரி வருகிறது
நடைமுறையில் இருக்கும் வட் வரிக்குப் பதிலாக பழைய வணிக வரியை மீள அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பெறுமதி கூட்டிய வரி எனும் வட் வரி அறவிடும் நடைமுறையில் நிலவும் குறைபாடுகள் காரணமாக அரசாங்கத்துக்கு பெரும் வரி இழப்பு ஏற்படுகின்றது.
அத்துடன் வட் வரி ஒரே தடவையில் அறவிடப்படுவதன் காரணமாக வர்த்தகர்களும், பொது மக்களும் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.
இதனை தவிர்க்கும் வகையில் வர்த்தகத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளின்போதும் சிறு சிறு வரிகளாக பழைய வணிக வரியை மீள அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நடைமுறை மிக விரைவில் செயற்படுத்தப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
இதற்கான சிபாரிசுகளை இலங்கை வர்த்தக சம்மேளனம் அண்மையில் நிதியமைச்சரிடம் கையளித்துள்ளது.
Any tax shall be instant and not after years making taxpayers mentally free.
ReplyDelete