Header Ads



யாழ்ப்பாணத்தில் இப்படியும் நடைபெற்றது

தாபரிப்பு பணத்தை பெற்றுக்கொள்வதற்காக பெண்ணொருவர்  தனக்கு பிறந்த குழந்தைக்கு, இளைஞன் ஒருவனை தந்தையாக்க முயன்ற சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

அக்குழந்தை அவ்விளைஞனுக்கு பிறந்தது அல்ல என்று மரபணு பரிசோதனையின் ஊடாக அம்பலமானதையடுத்து, தபாரிப்பு கேட்டு வழக்குத்தாக்கல் செய்த பெண், குறித்த இளைஞனுக்கு நட்டஈடு செலுத்தவேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனக்குப் பிறந்த குழந்தைக்கு அவ்வூரைச் சேர்ந்த இளைஞரொருவன் தான் காரணம் என்றும், குழந்தையை வளர்ப்பதற்கு தாபரிப்பு பணம் வழங்கவேண்டுமெனக்கோரி,  சாவகச்சேரி தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதியன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் தாபரிப்பு வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு கடந்த 11 மாதங்களாக சாவகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நடைபெற்று வந்ததுடன் 28ஆம் திகதி புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அந்தக் குழந்தைக்கு தான் காரணமில்லையெனத் தெரிவித்த இளைஞன், மரபணு பரிசோதனையின் மூலம் அதனைத் தான் நிரூபிப்பதாகவும் அதற்கான செலவை தானே ஏற்பதாகவும் தனது சட்டத்தரணியூடாக நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

அதனை ஏற்ற நீதவான், மரபணு பரிசோதனைக்கும் உத்தரவிட்டார்.

மரபணுப் பரிசோதனையில் மேற்படி இளைஞன் குறித்த குழந்தைக்கு தந்தையில்லையென்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, மேற்படி இளைஞனை விடுதலை செய்த நீதவான், இவ்வாறான பொய் வழக்கை இனிவரும் காலங்களில் தாக்கல் விளக்கமறியலில் வைக்கப்படுவீர் என அப்பெண்ணை கடுமையாக எச்சரிக்கை செய்தார்.

அத்துடன், மரபணு பரிசோதனைக்காக இளைஞன் செலவு செய்த 9,750 ரூபாய், வழக்குச் செலவு 5,000 ரூபாய் ஆகியவற்றை இளைஞனுக்குச் செலுத்துமாறு அப்பெண்ணுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

1 comment:

  1. பேராசை பெரும் நஷ்டம் என்பது இதைத்தான்!

    உண்மையான குற்றவாளிகளை மறைத்து அப்பாவிகளை மாட்டிவிடுவதை இதுவரை பொலீஸ் திணைக்களம்தான் செய்துகொண்டிருந்தது. பொல்லாத கலியுகப் பெண்களும் இதை ஆரம்பித்து விட்டார்களா என்ன.?

    ReplyDelete

Powered by Blogger.