குழந்தை பெறுவதற்கு தயாரான பெண், வாக்களிப்புக்குச் சென்றார்..!
கனடா- வாக்களிக்காமல் இருப்பதற்கு காரணங்கள் தேடுபவர்களும் இருக்கும் நிலையில் இக்கட்டான ஒரு நிலைமையிலும் வின்னிபெக்கை சேர்ந்த தம்பதியர் வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளனர்.
இவர்களின் இச்செயல் சமூக ஊடகங்களில் பெரிய அளவில் பரவியுள்ளது. பெரும்பாலான கனடிய மக்களிடையே மாற்றங்களை ஏற்படுத்திய வரலாறு மிக்க தேர்தல் தினத்தன்று மேற்குறிப்பிட்ட தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் பிறந்துள்ளனர்.
ஜிலியன் மற்றும் சான்டி ரறொனொ ஆகிய இரு தம்பிதியினருக்கும் ஒக்டோபர் 19 இக்குழந்தைகள் பிறந்தன. எந்த ஒரு வாக்கையும் இழக்க இவர்கள் விரும்பவில்லை.
வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னர் வாக்களித்து விட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்கு சாவடிக்கு சென்று வரிசையில் நின்றவர்களிடம் தங்கள் நிலைமை தெரிவித்து வரிசையில் முன்னால் செல்ல அனுமதி கேட்டுள்ளனர்.
இவர்களின் ஆர்வத்தையும் நிலைமையையும் அறிந்த மக்களும் அவர்களிற்கு அனுமதி வழங்கினர்.
ஜிலியனிற்கு பிரசவத்திற்கான அறுவைச்சிகிச்சை காலை 9மணிக்கு இடம் பெற திட்டமிட்டிருந்தது. வாக்களித்து விட்டு வைத்தியசாலைக்கு சென்ற இவருக்கு மூன்று குழந்தைகளும் முறையே பிற்பகல் 1.03, 1.04 மற்றும் 1.05 நேரத்தில் பிறந்தனர்.
சமூக ஊடகத்தின் கவனத்தை இச்சம்பவம் பெரிதாக ஈர்த்துள்ளது. வாக்களிக்காமல் இருப்பதற்கு சாக்கு போக்கு எதுவும் இல்லை என இச்சம்பவம் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிலியனின் சத்திர சிகிச்சை ஒக்டோபர் 20 செய்வதென திட்டமிட்டிருந்த காரணத்தால் இவர்கள் முன்கூட்டிய வாக்கு பதிவிற்கு செல்லவில்லை.
மார்த்தா எர்னா, சாடி ஹெலன் மற்றும் எலிநோர் மேயி என்பது மூன்று பெண் குழந்தைகளின் பெயர்களாகும்.
Post a Comment