Header Ads



சிரியா அகதிச் சிறுவனுக்கு, பீட்சா கிடைத்தபோது... (படங்கள்)


அகதிக் குழந்தைகளுக்கு பீட்சா பரிமாறிய வாலிபரின் மனிதாபிமானத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ஸ்க்ரோஷியா நாட்டின் எல்லைப்பகுதி வழியாக சிரியா அகதிகள் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளுக்கு செல்கின்றனர்.

தற்போது வரை சுமார் இரண்டரை லட்சம் பேர் கடந்துசென்றுள்ளனர். இதனால், எல்லைப்பகுதியில் பாதுகாப்பை அதிகரித்து தடை வேலிகளை க்ரோஷியா அமைத்துள்ளது.

இந்நிலையில் க்ரோஷியா நாட்டின் எல்லையைக் கடந்து ஸ்லோவேனியாவின் நாட்டிற்கு சென்ற அகதிகள் அங்குள்ள சென்டில்ஜ்ன என்ற கிராமத்தில் தடைவேலிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இங்குள்ள குழந்தைகளுக்கு நபர் ஒருவர் சாப்பிடுவதற்கு பீட்சாக்களை பரிமாறியுள்ளார், இவர் பீட்சா வழங்கும்போது அகதிச்சிறுவன் ஒருவன் அதனை ஆசையாக வாங்கும் காட்சியை லியோன்ஹார்ட் போஜன் என்ற புகைப்படக்கலைஞர் படம்பிடித்து வெளியிட்டுள்ளார். அந்நபரின் மனிதாபிமானத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.



No comments

Powered by Blogger.