Header Ads



சிங்கள வாக்குகள் மஹிந்தவிற்கே - தமி­ழர்,­ முஸ்­லிம்­கள் ஆட்­சி­மாற்­றத்தை ஏற்படுத்தினர் - எரிக் சொல்ஹெய்ம்

அர­சியல் உரி­மை­களை பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளான சிங்­க­ள­வர்கள் ஒரு­போதும் அன்­ப­ளிப்­பாகத் தரப்­போ­வ­தில்லை என்று நோர்வேயின் இலங்­கைக்­கான முன்னாள் சமா­தானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

லண்­டனில் நேற்று முன்தினம் மாலை இடம்­பெற்ற புத்­த­க­வெ­ளி­யீட்டு நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய அவர்,

 தமி­ழர்கள் தமது உரி­மை­களைப் போரா­டியே பெற­வேண்டும் என்றும் தெரி­வித்­துள்ளார். இலங்கை அர­சாங்­கத்­திற்கும் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்­திற்கும் இடையில் இடம்­பெற்ற சமா­தான முயற்­சி­களில் நோர்­வேயின் அனு­ச­ரணைப் பங்கு குறித்து லண்­டனில் நூல் ஒன்று நேற்­று முன்தினம் வெளி­யி­டப்­பட்­டது.

மார்க் சோல்டர் என்ற ஆய்­வா­ள­ரினால் இயற்­றப்­பட்ட "சிவில் யுத்­த­மொன்றை முடி­வுக்குக் கொண்­டு­வர இலங்­கையில் நோர்­வேயின் சமா­தான முயற்சி" என்ற இந்த நூல் வெளி­யீட்டு நிகழ்வில், நோர்­வேயின் இலங்­கைக்­கான சமா­தான தூது­வ­ராகப் பல­வ­ரு­டங்கள் பணி­பு­ரிந்த எரிக் சொல்­ஹெய்மும், முன்னாள் நோர்வே அமைச்சர் விதார் ஹெல்­க­சனும் கலந்­து­கொண்­டனர்.

அங்கு உரை­யாற்­றிய எரிக் சொல்ஹெய்ம் இலங்கையில் புதிய ஆட்சி ஏற்­பட்­டி­ருப்­பது நம்­பிக்­கை­ய­ளிப்­ப­தாக இருக்­கின்­ற­போ­திலும், ஈழத்­த­மி­ழர்கள் களத்­திலும், புலத்­திலும் தொடர்ச்­சி­யாகப் பல்­வேறு வழி­களில் போராட்­டங்­களை மேற்­கொள்­வதன் ஊடா­கவே தமது உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்றும், சிங்­க­ள­வர்கள் தமி­ழர்­களின் அர­சியல் உரி­மை­களை ஒரு­போதும் அன்­ப­ளிப்­பாகத் தரப்­போ­வது கிடை­யாது என்றும் தெரி­வித்தார்.

இலங்கையில் இடம்­பெற்ற தேர்­தலில் பெரும்­பான்­மை­யான சிங்­கள மக்கள், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவிற்கே வாக்­க­ளித்­தி­ருப்­ப­தா­கவும் தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் இணைந்தே ஆட்­சி­மாற்­றத்தைக் கொண்டுவர முடிந்தது என்றும் சுட்டிக்காட்டிய அவர், புதிய அரசு நேர்த் தியான வழியில் சமாதான முயற்சிகளில் ஈடுபட சர்வதேச சமூகம் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

4 comments:

  1. இலங்கை அரசியல் ஆழமாக தெரியாது. ஆனால் இவரது பேச்சு, மீண்டும் பிரச்சினையி தூண்டி விடும் நோக்கம் கொண்டது போன்று தெரிகின்றதே?

    ReplyDelete
  2. நிச்சயமாக பிரச்சனைகளை தூண்டி விடுவதற்காகவே.எரிக் சொல்ஹெய்ம் பயங்கரமான நரி.

    ReplyDelete
  3. இவரின்கருத்தில்.நிறைய விடயங்கள் பதிந்து இருக்கிறது .உண்மையும் உண்டு அதேநேரம் குழப்பத்தை உருவாக்கும்் செய்தியும் உள்ளே ஒழிந்து இருக்கிறது.

    ReplyDelete
  4. Mahinda sought nomination for parliamentary election because of the confidence he
    had on Sinhala votes. And UNP received only a very narrow win. Who gave the
    confidence to Mahinda to stay in politics ? Sinhala voters did it . What Solheim says is
    true as far as the election result is concerned. But what Solheim didn't say was that
    Muslim and Tamil votes alone was not enough to oust Mahinda . Good amount of
    Sinhala UNP ,SLFP and JVP joined hands against Mahinda's family rule . So , it was
    a united effort of all three communities with mainly Tamil Muslim determination that
    the ousting of Mahinda became a reality . But it's also a reality that the racist elements led by Mahinda , have not given up and instead busy representing those who voted them in.

    ReplyDelete

Powered by Blogger.