Header Ads



ஜனநாயகம் ஓர், இஸ்லாமிய நோக்கு

-ஹுஸ்னி ஹனீபா - ஜாமியா நளீமியா-

21 ஆம் நூற்றாண்டை சமூகவியலாளர்கள் ”ஜனநாயக நூற்றாண்டு ” என அழைப்பார்கள். ஜனநாயகம் பற்றிய கதையாடல்களுக்கு அப்பால் , பல நாடுகள் அடக்குமுறை ஆட்சியாளர்களினதும் , அநீதியான ஏகாதிபத்திய அரசுகளின் கோரப்பிடியிலிருந்தும் அடக்குமுறைமைகளிலிருந்தும் விடுபட்டு மெல்ல சுதந்திரக் காற்றை அனுபவிக்க ஆரம்பித்த ஒரு நூற்றாண்டாக காணப்பட்டது இதற்கு மிக முக்கியமான காரணமாகும்.

எனவே ஜனநாயகம் என்ற விவகாரம் புதிதாக நோக்கப்பட்டது , புதுனமாக புதுமையாகப் பார்க்கப்பட்டது , பொது மக்கள் வட்டத்தில் பாரிய வரவேற்பை பெற்றது. பலர் தமது கோஷங்களாகவும் , இறுதி இலக்காகவும் இதனை அடையாளப்படுத்தினர். குறிப்பாகச் சொன்னால் பல நாடுகளது அரசியல் கொள்கைகளின் , அரசியல் கட்சிகளின் மூல மந்திரமாக உச்சரிக்கப்பட்டது.

சுறுக்கமாகச் சொன்னால் ஜனநாயகம் என்ற சொல் அது சுமந்து வந்த சிந்தனை அது ஏற்படுத்திய வாழ்வியல் மாற்றங்கள் அனைத்தும் உலகத்தாரால் விதிவிலக்கு இன்றி அருளாகப் பார்கப்பட்டது .

இந்த பின்னணியில் தான் அரபுலகத்திலும் குறிப்பாக உயர் கொள்கையை சுமந்திருக்கும் முஸ்லீம்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனவே வழமையைப் போன்றே ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணலில் தமது சிந்தனைப்பாங்கு ,ஆய்வியல் முறைமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படைகளோடு ஒப்பிட்டு நோக்கி இறுதியாக ஒரு சிலர் இது பூரணமாக இஸ்லாத்துக்கு முரணான ஒரு சிந்தனை என்ற முடிவுக்கு வந்தனர் .

இன்னும் சிலர் இது இஸ்லாத்தின் மறு வடிவம் என வர்ணித்து பூரணமாக அங்கீகரித்தனர் . இன்னும் சிலர் இதனை நடுநிலைக் கண்ணோட்டத்தில் நோக்கினர். எனவே இது ஒரு விரிவான தலைப்பு பல ஆய்வுக் கட்டுரைகளும் , புத்தகங்களும் இத்தலைப்பு தொடர்பாக வித்தியாசமான சிந்தனைகளை சுமந்து வெளிவந்தவன்னமே உள்ளன.

எனவே இக்கட்டுரையின் நோக்கம் ஜனநாயகம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஓர் இரு குற்றச்சாட்டுகளுக்கு ‘-ஷாத்துபி அல் – அஸ்ர்’என்று வர்ணிக்கப்படக் கூடிய கலாநிதி அஹ்மத் ரயீஸுனி எழுதிய ”இஸ்லாமிய சிந்தனையும் எமது நவீன அரசியல் விவகாரமும்” என்ற நூலை தழுவி முன்வைக்கப்படும் சில பதில்களாகும்.

நேரடியாக குற்றச்சாட்டுகளையும் அதற்கான பதில்களையும் நோக்கமுன்னர் ஜனநாயகம் என்றால் என்ன ? என்பது பற்றிய புறிதல் காணப்பட வேண்டும் எனவே ஜனநாயகம் தொடர்பாக முன்வைக்கப்டும் பல வரைவிலக்கணங்களுள் மிகப் பொருத்தமான ஒரு வரைவிலக்கணமாக அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி ஆப்ராஹாம் லிங்கனின் (1809-1865) வரைவிலக்கணத்தை அடையாளப்படுத்தலாம்.

    Government of the people, by the people, for the people»
    மக்களால் மக்களுக்கென்று உருவாக்கப்பட்ட மக்கள் அரசாங்கமே ஜனநாயகமாகும்

எனவே அதிகாரம் மக்களுக்குறியது தம்மை ஆட்சி செய்ய தாமே தீர்மாணம் மேட்கொள்ளும் சக்தி ஜனநாயகத்துக்குறியது என்ற பெருமானத்தை அந்த சொல் சுமந்திருக்கின்றது என முடிவுக்கு வரலாம் .எனவே ஜனநாயகத்தை நோக்கி இஸ்லாமிய அறிஞர்கள் முன்வைக்கும் கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
1ஆவது குற்றச்சாட்டு

”அல்லாஹ் இஸ்லாமிய ஷரீஆவில் ”ஷூறா” என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்திவைத்துள்ளான் எனவே ஜனநாயகத்தை விட ஷூறா சிறந்தது ஏற்றமானது.

 பதில்

இதற்கான பதிலை நோக்குவதற்கு முன்னர் ஷரீஆவின் ,அல்லாஹ்வின் சட்டவாக்கம் தொடர்பான ஒரு உண்மையைப்புறிந்து கொள்ள வேண்டும் ”அல்லாஹ் மனித நடத்தையோடு , காலமாற்றத்துக்கு ஏற்ப மாறுபடும் நடைமுறை விவகாரங்கள் போன்றவற்றில் அடிப்படைகளை மாத்திரம் இட்டு அதன் நடைமுறை வடிவம் எப்படியிருக்க வேண்டும் என்பதனை மனிதனுடைய இஜ்திகாதுக்கு விட்டுள்ளான் உதாரணமாக ஆட்சி எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதற்காக சில பெருமானங்களை உன்மை , நீதி , போன்ற வைகளை பூரண வடிவில் தெளிவுபடுத்தியுள்ளான் ஆனால் அது எந்த முறைமையில் அமைய வேண்டும் என்பது காலமும், மனித இஜ்திகாதும் தீர்மாணிக்கும்.

இது போன்றுதான் அக்குற்றச்சாட்டும் ஷூறா மற்றும் ஜனநாயகம் என்ப வற்றின் யதார்த்தம் புறியப்படாமையினால் தோன்றிய ஒரு கேள்வியாகும் எனவே ஷூறா என்பது ஒரு அடிப்படை விவகாரம் அதன் செயல்வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்பதனை காலமும் , மனித இஜ்திஹாதுமே தீர்மாணிக்கும் ஆனால் ஜனநாயகம் என்பது ஒரு செயல்வடிவமாகும். எனவே ஷூறா என்ற அடிப்படையும் ஜனநாயகம் என்ற செயல்வடிவமும் ஒன்றுக் கொன்று முரணாகாது ஒன்று இன்னொன்றை ப் பலப்படுத்தும்.
2 ஆம் குற்றச்சாட்டு

ஜனநாயகம் என்பது சிலைவணக்கம் புறியும் ரோம் நாட்டில் தோன்றி மதச்சார்பற்ற மேற்கத்தய நாடுகளில் உரமூட்டி வளர்கப்பட்ட ஒன்று எனவே ஜனநாயகம் என்பது ஷிர்கும் , மதச்சார்பின்மையினதும் ஓர் கலவையாகும்.

பதில்

மதச்சார்பான ஒரு நாட்டில் தோன்றிய ஒன்றை ஏன் மதச்சார்பற்ற நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்? எனவேஇதற்கும் மதத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது மாற்றமாக ஜனநாயகம் என்பது மனித வாழ்வொழுங்கில் தோன்றிய ஒரு விவகாரம் அது மதங்களை ஏற்கவும் மாட்டாது எந்த ஒரு மதத்தின் இருப்பையும் மறுக்கவும் மாட்டாது.
3 ஆம் குற்றச்சாட்டு

”ஜனநாயகம் என்பது மக்கள் கருத்துக்கு உயர் ஸ்தானம் வழங்குதலாகும் எனவே அல்லாஹ்வின் வார்த்தைக்கு உயர் இஸ்தானம் வழங்கப்படுகிறது’ இதே மறுபக்கத்தால் ஜனநாயக வாதிகள் ”முஸ்லீம்கள். ஜனநாயக விரோதிகள் அவர்களிடம் மக்கள் குறல் ஓங்குவதற்குப் பதிலாக இறைவனின் ஆணையே ஓங்கிநிற்கும் ”

பதில்

இங்கு முதலில் ஒரு கருத்தை புறிந்து கொள்ள வேண்டும் ஜனநாயகம் என்பது பெரும் பாண்மையினரின் குறல் எனவே இஸ்லாமிய நாட்டில் வசிக்க கூடியவர்கள் பெரும்பான்மையினர் இறை சட்டத்தையே விரும்புவர் எனவே அவ்வாரு பெரும் பாண்மையினரின் விருப்பம் இறை சட்டமாக இருக்கும் பொழுது ஜனநாயகம் பிரதிபளிக்கும் அது இறை வாக்குக்கு முரணாக அமையாது இஸ்லாமிய நாட்டில் வசிக்க கூடிய பெரும்பான்மையினர் இறை சட்டமல்லாத இன்னொன்றை விரும்பினால் அது ஜனநாயகத்தின் குறைகிடையாது மாற்றமாக ஷரீஆ அறிவை மக்கள் மயப்படுத்துவதில் சமூகத்தை அறிவூட்டுவதில் இஸ்லாமிய இயக்கங்கள் விடும் தவறாகும் . உண்மையில் ஜனநாயகம் ஓர் இஸ்லாமிய நோக்கு என்ற தலைப்பு இன்னும் விரிவான ஆய்வுகளை வேண்டிநிற்கின்றது.

3 comments:

  1. 'ஜனநாயகம் ஒரு புற்றுநோய். இஸ்லாமே அதற்குரிய தீர்வு' என்று மேலிருக்கும் படத்திலுள்ள பதாகையின் கோஷம் ஒன்றே போதும். இந்தக் கட்டுரையின் முன் முடிவுடன் கூடிய ஆய்வு பற்றிக் கூறுவதற்கு.

    ReplyDelete
  2. நான் இந்த பின்னுட்டலுக்கு பதில் சொன்னால் தனிப்பட்ட பகைமை என்பீர்கள் சரி உங்கள் பின்னுட்டலில் இருந்து மற்ற சகோதரர்களுக்கு என்ன விளங்குகின்றது பார்ப்போம்? இப்பின்னுhட்டல் இஸ்லாத்திற்கு சார்பானதா? அல்லது இஸ்லாமிய பெயரில் வரும் இஸலாமிய விரோதியின் பின்னுபட்டலாகத் தெரிகிறதா?

    ReplyDelete
  3. 'வைத்தால் குடுமி அடித்தாhல் மொட்டை' என்று ஒரு கிராமத்துப் பழமொழியுண்டு.

    ஏன் நண்பர் ஜிப்ஃரீ, சார்பு அல்லது விரோதம் என்றுதான் சகலவற்றையும் எடுத்துக்கொள்ள வேண்டுமா..? ஏன் நடுநிலை நின்று உண்மையைச் சொல்வதாக இருக்கக்கூடாதா..?

    நீங்கள் வரித்துக்கொண்டிருக்கும் கருத்தியல்களில் மாற்றத்திற்கே இடமில்லை என்று நினைப்பவர்கள் (முன்முடிவுகளுடன்) விவாதங்களுக்கு வருவதை விட வராமல் இருப்பதுவே மேல். மாறாக விவாதங்களின் பலனாக விளையும் பொது முடிவுகளைப் பரிசீலித்து மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருந்தால் மட்டுமே வாருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.