ஜனாதிபதி மைத்திரி குறித்து பெருமைப்படுகிறேன் - மகிந்த ராஜபக்ஸ
ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி மைத்திரி சிங்களத்தில் உரையாற்றியது குறித்து தான் பெருமிதமடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (15) நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவொன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ,
ஐக்கிய நாடுகள் சபையில் முதன் முதலில் சிங்களம் மற்றும் தமிழில் நான் தான் உரையாற்றினேன். சிங்களத்தில் சர்வதேசத் தலைவர்கள் முன் உரையாற்றுவது குறித்து ஒரு சிலர் விமர்சனங்களை முன்வைக்கவும் செய்கின்றார்கள். ஆனால் நாம் அவற்றை உதாசீனப்படுத்தி விட வேண்டும்.
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் முடிவுற்றதன் பின்னர் இலங்கை மீது அந்நிய சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இது குறித்து நாம் அனைவரும் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Aappu vechathukum deaths?
ReplyDelete