Header Ads



புலிகள் செய்த போர் குற்றங்களை, விசாரணை நடத்துமாறு முறைப்பாடு

யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு செய்த போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேராசிரியர் கும்புறுகமுவே வஜிர தேரர் உட்பட பிரதிநிதிகள் இன்று காவற்துறை மா அதிபரிடம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட குற்றங்களுடன் சம்பந்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 16 அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா மனித உரிமை பேரவையின் யோசனைக்கு அக்கறை காட்டியது போல் அரசாங்கம் தமது இந்த முறைப்பாடு தொடர்பிலும் அக்கறை காட்ட வேண்டும் என கும்புறுகமுவே வஜிர தேரர் கேட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.